கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்திற்கு புதிய டிஎஸ்பியாக பார்த்திபன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.  இந்நிலையில், திருக்கோவிலூர் பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக டி.எஸ்.பி பார்த்திபனுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் புறவழிச்சாலையில் ஈடுபட்ட தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, கார் ஒன்றில் கடத்திவரப்பட்ட  50 கிலோ எடைகொண்ட  20 மூட்டைகளில் சுமார் 1 டன் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.  கடத்தலில் ஈடுபட்ட காரின் ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம் சு.வாளவெட்டி கிராமத்தை  வேல்முருகன்(24) என்பவரை கைது செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட உணவுப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here