சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்படும் மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாள் ஸ்டாலின் உத்தரவின்பேரில் காரைக்குடி பகுதியில் உள்ள மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கல்லூரி சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் ஆய்வு செய்தபோது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது.

விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை மீட்டனர். தொடர்ந்து விபசாரம் நடத்திய மசாஜ் சென்டர் உரிமையாளர் மதுரை அண்ணாநகரை சேர்ந்த அருட்செல்வன் மனைவி நித்யஸ்ரீ என்ற மங்கையர்கரசி(வயது 38). வாடிக்கையாளர்கள் ஏகலைவன்(42), காரைக்குடி ராஜேசுவரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ரூ.3 ஆயிரத்து 500 ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் காரைக்குடி பெரியார் சிலை அருகே உள்ள மசாஜ் சென்டரிலும் விபசாரத்திலும் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர். விபசாரம் நடத்திய மசாஜ் சென்டர் மேலாளர் கண்டனூரை சேர்ந்த பூமதி(36), வாடிக்கையாளர் காமராஜ்(41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள உரிமயைாளர் சந்தோஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரைக்குடியில் கடந்த சில மாதங்களாகவே மசாஜ் சென்டர்கள் புற்றீசல்கள் போல் அதிகரித்துள்ளன. வறுமையை பயன்படுத்தி பெண்களை விபசாரத்தில் மசாஜ் சென்டர்கள் பயன்படுத்தி வருகிறது.

தற்போது 2 மசாஜ் சென்டர்களின் உரிமையாளர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போன்களை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். அதில் முக்கிய பிரமுகர்களின் செல்போன் எண்கள் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடி பகுதியில் மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     

                    – S.கல்கீஸ்வரன்- சிவகங்கை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here