சென்னை:
C3 ஏழுகிணறு காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளராக ஏக்நாத் (S.I) பணியாற்றுகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருபவர்களிடமும், எதிர் புகார்தாரர்களிடமும் மிரட்டும் தொனியில் தகாத வார்த்தையால் பேசி மன உளைச்சல் அடைய வைக்கிறார் என புகார்கள் எழுந்து வருகிறது. சமீபத்தில் வீடு லீசு பணம் 6,00000 (ஆறு லட்சம்) மற்றும் வாரிசு தாரர் யார் என்பது தொடர்பாக அகஸ்டின் என்பவர் கோதண்டராமன் மீது புகார் கொடுத்துள்ளார். இதை விசாரிக்க ஏக்நாத் S.I, தண்டையார்பேட்டை V.O.C நகரில் உள்ள கோதண்டராமன் வீட்டிற்கு 23.12.2023 மதியம் 12 மணிக்கு சென்றுள்ளார்.
கோதண்டராமன் நிருபரிடம் கூறுகையில்:
விசாரணையின் அடிப்படையில் வீட்டிற்கு வந்த ஏக்நாத் S.I அவர் இடுப்பில் ஒரு கையை திமிராக வைத்து என்னிடம் 10,000ரூ லஞ்சம் கொடு நான் முடித்து வைக்கிறேன் என்று மிரட்டும் தொனியில் கேட்டார். அதற்கு நான் ஏன்? சார் பணம் தர வேண்டும் என் மனைவியும் நானும் வாரிசுதாரர் தான் என்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறினேன். உடனே கோபம் அடைந்த ஏக்நாத் S.I என்னை தகாத வார்த்தையால் பேசி பிறகு போனில் உன் ஆதார் கார்டு ஆவணங்கள் கொண்டு வா… உன் மீது வழக்கு பதிவு (FIR) செய்ய போகிறேன் என்று கூறி மன உளைச்சல் அடைய வைத்துவிட்டார். எதிர் மனுதாரர் அகஸ்டின் என்பரிடம் பணம் வாங்கி கொண்டு இப்படி பதவியை தவறாக பயன்படுத்தி மிரட்டி வருகிறார். இவர் மீது உதவி ஆணையர், இணை ஆணையர் அவர்களிடம் என்னிடம் உள்ள ஆதாரம் அனைத்தையும் வைத்து புகார் கொடுக்க இருக்கிறேன். இவர் மீது காவல் ஆய்வாளர் மற்றும் உயர் காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே என்னை போல் மற்ற யாரும் மன உளைச்சல் அடைய மாட்டார்கள் என்று வருத்தத்துடன் இதை தெரிவிக்கிறேன். என்று கூறினார்.
காவல்துறையில் சிறப்பான நேர்மையான அதிகாரிகள் மத்தியில் ஏக்நாத் S.I போன்ற அதிகாரிகளால் சிறப்பாக பணியாற்றும் மற்றவருக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா? பார்ப்போம்……
– எமது இறுதி தீர்ப்பு நிருபர்