நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் சங்கீதா, பத்திரிகையாளர்களை சந்தித்து விஜய்க்கு எதிராக ஆவணங்களை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சங்கீதா தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜய். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். விஜய் 2 தொகுதிகளில் களமிறங்கி இருக்கிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் களமிறங்கி உள்ளார். இதுதவிர தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தினார். இதில், எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 233 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதற்கிடையே தான் விஜயிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். விஜய்க்கும், நடிகை ஒருவருக்கும் கள்ள உறவு இருப்பதாக அவர் குற்றம்சாட்டி இந்த விவாகரத்து மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் விஜய் – சங்கீதா ஆகியோரை ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக இருவரிடமும் விளக்கம் கேட்க நீதிமன்றம் முடிவு செய்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனால் ஏப்ரல் 20ம் தேதி விஜய் நீதிமன்றத்தில் ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது தேர்தல் நேரம் என்பதால் விஜய் ஆஜராகாமல் வழக்கறிஞரை அனுப்பி வைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தான் ஏப்ரல் 20ம் தேதி விஜய் மீதான குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை மனைவி சங்கீதா பத்திரிகையாளர்களை சந்தித்து வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில் சங்கீதா இப்படி செய்தால் அது விஜயின் இமேஜை பாதிக்கும். அதுமட்டுமின்றி தேர்தலிலும் எதிரொலிக்கலாம். இதனால் விஜய் மட்டுமின்றி தவெக வேட்பாளர்கள் பின்னடைவை சந்திக்கும் நிலை உருவாகும்.
இந்நிலையில் தான் விஜய் தரப்பில் இருந்து சங்கீதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 20ம் தேதி பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். இதையடுத்து சங்கீதா மனம் மாறி பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

















