சென்னை:
திருவான்மியூர் மெயின் ரோடு என்றாலே விஐபி வாகனங்கள், அதிக வாகனங்கள் செல்வது வழக்கம். இந்த நிலையில் சபரி என்ற போக்குவரத்து காவலர் திருவான்மியூர் சிக்னலுக்கே வசூல் ராஜாவாக மாறியுள்ளார். ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் இந்த சிக்னலை தாண்ட வேண்டும் என்றால் சபரியை கவனித்துவிட்டு சென்றால் மட்டுமே வாகன ஓட்டிகள் செல்ல முடியுமாம். வியாழக்கிழமை அன்று திருவான்மியூர் சிக்னலில் மாலை 5 மணியளவில் காரில் வந்த நபரிடம் சீட் பெல்ட் போடவில்லை என வாக்குவாதம் செய்து சபரி அவர்கள் 200ரூ பணத்தை காரின் உள்ளே கையை விட்டு வாங்கி தனது பையில் வைத்துள்ளார். இதற்கான வீடியோ ஆதாரம் தற்போது பரவி வருகிறது. இவர் அடையார், சாஸ்திரி நகர், பகுதிகளில் பணிபுரியும் போதே வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
சபரியின் சிறப்பு என்னவென்றால் வாகன ஓட்டியின் கையில் பணம் இல்லை என தெரிந்தால் உடனே அவரின் நண்பர் எண்ணை கொடுத்து அதில் பணம் அனுப்ப சொல்லுவாராம். R.I ஜாகிர் உசேன் அவரின் ரசீது இயந்திரத்தை வாங்கி கொண்டு எந்த ஒரு S.I யும் உடன் இல்லாமல் இவரே பில் போட்டு பணம் வாங்கி வருகிறார் என குற்றசாட்டு எழுந்துள்ளது. அதுவும் சனிக்கிழமை, ஞாயிற்று கிழமைகளில் வேறு பகுதி வாகன ஓட்டிகள் வந்தால் போதும் சிங்கம் சூர்யா மீசையுடன் கருப்பு கண் கண்ணாடி அணிந்து வசூல் மன்னனாகவே மாறிவிடுவாராம். முதலமைச்சரின் தனி பிரிவுக்கு புகார் கொடுப்பதற்குள் சபரி மீது காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. வெயில், மழை என பாராமல் நேர்மையாக பணிபுரியும் போக்குவரத்து காவலர்கள் மத்தியில் சபரி போன்ற காவலரால் துறைக்கே அவப்பெயர் ஏற்படுகிறது.
– எமது நிருபர்
Iruthi Theerppu (Registered News Paper of India)