இந்தியன் 2 ஷங்கர் படம் என்ற பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் கதை வென்றதா? கொன்றதா? வாங்க பார்ப்போம்.
தன் நண்பர்களுடன் ‘பார்க்கிங் டாக்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை வைத்து சமூக பிரச்சினைகளுக்காக, குறிப்பாக ஊழலுக்கு எதிராக பேசி வருகிறார் சித்ரா அரவிந்தன் (சித்தார்த்). தன்னால் எவ்வளவு முயன்றும் ஊழலை தடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவான சேனாபதி என்கிற ‘இந்தியன்’ தாத்தாவை (கமல்ஹாசன்) வரவழைக்க #ComeBackINDIAN என்ற ஹேஷ்டேகை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்கிறார்.
தைவான் நாட்டில் வர்மக் கலையை பயிற்றுவிக்கும் சேனாபதி இந்தியா திரும்பி வர போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு தொடர்ந்து ஊழலுக்கு எதிராக சில கொலைகளைச் செய்கிறார். இன்னொரு பக்கம் பாபி சிம்ஹா தலைமையிலான போலீஸ் குழு சேனாபதியை துரத்துகிறது. பிறகு என்ன நடந்தது என்பதே மீதி கதை…
சித்தார்த் நடிப்பு ஓகே. அம்மா செண்டிமெண்ட் கலங்க வைக்கிறது. கமலின் உடை, உடல் பாவானை நடிப்பு எல்லாம் சிறப்பு. சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், ரேணுகா, மனோபாலா, ஜெகன், பிரியா பவானி சங்கர், ரிஷி காந்த் ஆகியோர் நடிப்பு ஓகே.
இந்தியன் 1 கதையில் உள்ள சுவாரஸ்யம், கதையின் வலிமை இந்தியன் 2 கதையில் இல்லவே இல்லை என்பதே பெரிய வருத்தம். வர்மக் கலையில் புதுமையை சேர்க்கிறேன் என்று வில்லன்களை பாட்டு பாட வைப்பது, ஆணை பெண் போல நடந்து கொள்ள வைப்பது, குதிரை போல ஓடச் செய்வது என காமெடி செய்திருக்கிறார்கள் படத்தில். அனிரூத் இசை இந்த படத்திற்கு ஒர்கவுட் ஆகவில்லை. அரசு இலவச மிக்சி, கிரைண்டர் கொடுப்பதை படத்தில் கொச்சைபடுத்தியிருப்பது தவறு என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க மெட்ரோ ரெயிலை நம்ம தாத்தா பின் நோக்கி ஓட்டுவது எல்லாம் ரொம்ப ஓவர்…. தாத்தா ஏர்போர்ட் வரும் போதே CBCID பிடிக்க முடியாமல் தப்பித்து கடத்துவது எல்லாம் பழைய பட காட்சியப்பா… தாத்தா நடு ரோட்டில் யாரிடமும் சிக்காமல் சேஸிங் செய்யும் காட்சி எல்லாம் கொடுமையடா சாமி…. ஷங்கர் அய்யாவே… இந்தியன் 3 யில் கூடுதல் கவனம் செலுத்தி எடுத்தால் தங்கள் மீது நம்பிக்கை வைத்து வரும் ரசிகர்கள் ரசிப்பார்கள் இல்லையென்றால் கடையை மூடும் நிலைமை வர வாய்ப்புள்ளது ஜாக்கிரதை அய்யா.
இந்தியன் 2- தாத்தா ரசிகர்களை கதரவிட்டு கலங்க வச்சிட்டாரு…..