ர்தார், லப்பர் பந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயின் உடன் இணைந்து  தயாரித்துள்ள படம்  ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X). இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், சஞ்சனா சிங், காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விமர்சனம்:

1964 ஆம் ஆண்டு நியூக்ளியர் பாம் தயாரிக்கும் மூலப்பொருட்கள் கொண்ட ஒரு பெட்டியை அமெரிக்கா இந்தியாவின் இமயமலை பகுதியில் விட்டு சென்று விடுகிறது. இந்த பெட்டியை இந்திய உளவுத்துறை அமைப்பான ரா-வில் இருக்கும் சரத்குமார் பாதுகாத்து வருகிறார்.

இந்தியா, அமெரிக்கா சேர்ந்து நந்தாதேவி என்ற இடத்தில் ஒரு நியூக்ளியர் டெஸ்ட் செய்ய போக, அங்கு நடந்த பனிச்சரிவில் அந்த நியூக்ளியர் டிவைஸ் அங்கேயே தொலைகிறது. இதை பல வருடம் கழித்து ரஷ்யா கண்டுப்பிடிக்க, அவர்கள் பாகிஸ்தானுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டுகின்றனர்.

அந்த நேரத்தில் இந்தியாவின் முன்னணி ரா ஏஜண்ட் சரத்குமார் அவர்களை கொன்று டிவைஸை கைப்பற்ற ஆனால், எப்படியோ ரஷ்யாவிடம் சிக்கி கொள்கிறார். இவரை காப்பாற்ற ரஷ்யாவில் லோக்கலில் இருக்கும் இந்தியன் ஏஜண்ட் கௌதம் கார்த்திக்கை அனுப்ப, அந்த மிஷன் எதிர்பாராத டுவிஸ்ட் ஒன்றுடன் பெயிலியர் ஆகிறது.

இதனால் இந்தியாவில் சென்னையில் இருக்கும் ரா ஏஜண்ட் ஆர்யா மற்றும் அவரின் டீம்-ற்கு ரஷ்யா சென்று சரத்குமார் மற்றும் அந்த நியூக்ளியர் டிவைஸை கைப்பற்ற ஆர்டர் வர, அதன் பின் நடந்த பல திருப்பங்கள் மற்றும் இந்த மிஷனை வெற்றிகரமாக ஆர்யா முடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை…..

பரபரப்பான காட்சிகள், மாறுபட்ட லொகேஷன், ஆர்யா – அனேகா காதல் என முதல் பாதி படம் நன்றாகவே வந்துள்ளது. சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் மிக நேர்த்தியாக உள்ளது. ஒளிப்பதிவும், ஆர்ட் டைரக்ஷன் இரண்டும் ஹாலிவுட் படத்தை நினைவு படுத்துகிறது. ஆர்யா கதை, சரத்குமார் கதை, அணு ஆயுத கதை என பல டிராக்களில் கதை நகர்வதும், இடையே சொல்லப்படும் நிறைய டீட்டெய்ல்களும் என பார்வையாளரை எப்போதும் கவனிக்க வைக்கும்படி இருக்கிறது படம். ஸ்டண்ட் சில்வாவின் சண்டைக்காட்சிகள் ஸ்டைலிஷாகவும் இருக்கிறது, பரபரப்பையும் சேர்க்கிறது.

மைனஸ்: கதையை கணிக்க முடிகிறது…. அண்ணன் தங்கை கதை ரொம்ப பழசு…. படத்தில் டிவிஸ்ட் பெரிய அளவில் இல்லை.

இந்த ‘மிஸ்டர் எக்ஸ் MR X’ பெயருக்கு தகுந்த மாஸ் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here