செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில், அனிவீ இசையில், உதய் கார்த்தி, விவேக் பிரசன்னா, சுபிக் ஷா, ஸ்ரீஜா ரவி, பார்த்திபன் குமார் என பலர் நடித்துள்ள படம் தான் ‘ஃபேமிலி படம்’.
படத்தின் கரு: சினிமாவில் இயக்குனராக ஆக வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட இளைஞன்.
ஒரு சாதாரண குடும்பத்தில் இரண்டு ஆண்களுக்கு தம்பியாக பிறந்தவர் கதாநாயகன் உதய் கார்த்தி. இவரது மூத்த அண்ணன் விவேக் பிரசன்னா ஒரு வக்கீல். இவரது இரண்டாவது அண்ணன் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார். நாயகன் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் ஒவ்வொரு தயாரிப்பாளரிடம் சென்று தன் கதையை கொடுக்கிறார் எந்த தயாரிப்பாளரும் அவர் கதையை நிராகரித்து விடுகிறார்கள். ஒரு தயாரிப்பாளர் மட்டும் இவர் எடுத்த குறும்படத்தை பார்த்து இவருக்கு வாய்ப்பு தருவதாக கூறி ஒப்பந்தம் செய்து கொள்கிறார். ஆனால் தான் சொல்லும் கதாநாயகனுக்கு இந்த கதை படமாக்க வேண்டும் என்பது இந்த தயாரிப்பாளர் நிபந்தனை. இந்த நிபந்தனையை ஏற்க முடியாது என்று சொல்கிறார் கதாநாயகன் உதய் கார்த்தி. அதற்கு தயாரிப்பாளர் ஒப்பந்தப்படி அந்த கதை எனக்கு சொந்தம் என்று கூறுகிறார். இதனால் மன உடைந்த கதாநாயகனும் கதாநாயகன் அண்ணன்களும் தாங்களாகவே தயாரிப்பாளராக வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். தன் குடும்பத்தினருடன் இணைந்து திரைப்படத்தை தயாரித்து வெற்றி கண்டாரா? இல்லையா? என்பதே கதை
படத்தில் நடித்த அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளனர். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு, சுதர்ஷன் எடிட்டிங் ஓகே. அம்மாவாக வரும் ஸ்ரீஜா ரவி, நிஜ அம்மாக்களை நினைவுபடுத்துகிறார். பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரமும் ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார். நாயகி சுபிக்ஷாவுக்குகாட்சிகள் குறைவு என்றாலும், வரும் காட்சிகளில் கவர்கிறார். ஃபேமிலி படம் குடும்பத்தினருடன் போய் பார்க்கலாம்.
படம் சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது…. மனதில் பெரிய அளவில் பதியவில்லை… கதையை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.
இந்த ஃபேமிலி படம்- குறிக்கோள் கொண்ட இளைஞனின் மனவலிமை…..
ராஜ் குமார்- சினிமா நிருபர்