சென்னை: 

மருத்துவ சேவையில் முன்னணியில் உள்ள அப்போலோ மருத்துவமனை, அப்போலோ ஒன் [Apollo One] மையத்தில் அதன் ஒருங்கிணைந்த நியூரோ-ஈஎன்டி வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் க்ளினிக்கை  [Integrated Neuro-ENT Vertigo and Balance Disorders Clinic] தொடங்குவதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த புதுமையான க்ளினிக் நரம்பியல் நிபுணர்கள் மற்றும் ஈஎன்டி (காது மூக்கு தொண்டை) நிபுணர்களின் ஆழ்ந்த நிபுணத்துவத்தை ஒருங்கிணைக்கிறது. வெர்டிகோ, உடல் இயக்கத்தில் சமநிலையற்ற தன்மை (செயல்பாட்டு சமநிலைக் கோளாறு), விழுந்து விடுவோம் என்கிற அச்சம்  [vertigo, imbalance (functional balance disorder),  the fear of falling.] போன்றவற்றைக் கொண்ட நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சையை இது வழங்கும். வீடியோனிஸ்டாக்மோகிராபி (videonystagmography (VNG)), வீடியோ ஹெட் இம்பல்ஸ் டெஸ்ட் (vHIT), கலோரி சோதனை [caloric testing] மற்றும் மூளை இமேஜிங் [brain imaging] உள்ளிட்ட அதிநவீன நோய் கண்டறியும் தொழில்நுட்பங்களை இந்தக் க்ளினிக் பயன்படுத்துகிறது. இதன் மூலம் நோயாளிகளின் உடல்நிலை குறித்து துல்லியமான மற்றும் விரிவான மதிப்பீடுகளை உறுதி செய்கிறது.

மேலும், சென்னை அப்போலோ மருத்துவமனை வெர்டிகோ உச்சி மாநாடு 2024 [Chennai Vertigo Summit 2024]-ஐ டிசம்பர் 7,  8 ஆகிய தேதிகளில் சென்னை தாஜ் கோரமண்டலில் நடத்துகிறது. இந்த உச்சிமாநாடு வெஸ்டிபுலர், ஒகுலர் மோட்டார் மற்றும் உடல் இயக்க சமநிலை கோளாறுகளின் [vestibular, ocular motor, balance disorders] சிகிச்சையில் அண்மைக்கால முன்னேற்றங்களைப் பற்றி விவாதிப்பதற்காக முன்னணி நிபுணர்களை ஒருங்கிணைக்கும் தளத்தை உருவாக்குகிறது.

வெர்டிகோ, உடல் இயக்க சமநிலையற்ற தன்மை மற்றும் விழுந்து விடுவோம் என்கிற அச்சம்  (fear of falling) ஆகியவை வாழ்க்கைத் தரத்தை வெகுவாக பாதிக்கும் மிக சிக்கலான குறைபாடுகளாகும். இந்த கோளாறுகளுக்கு துல்லியமான நோயறிதல் முறைகள் தேவை. அத்துடன் இவற்றின் சிகிச்சைக்கு ஒரு பல்துறை சார்ந்த சிறப்பு அணுகுமுறை தேவைப்படுகிறது. அப்போலோ ஒன்-னில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள க்ளினிக், நரம்பியல் நிபுணர்கள் மற்றும் ஈஎன்டி நிபுணர்களின் நிபுணத்துவத்தை ஒருங்கிணைக்கிறது. ஆடியோலஜிஸ்டுகள் மற்றும் வெஸ்டிபுலர் மறுவாழ்வு சிகிச்சையாளர்களால் [vestibular rehabilitation therapists] இது வழி நடத்தப்படுகிறது. இந்த நிலைமைகளின் ஒவ்வொரு அம்சத்தையும் நிவர்த்தி செய்யும் விரிவான சிகிச்சையை இந்த க்ளினிக் வழங்குகிறது. முழுமையான மற்றும் துல்லியமான நோயறிதலுக்காக வீடியோனிஸ்டாக்மோகிராபி (VNG), வீடியோ ஹெட் இம்பல்ஸ் டெஸ்ட் (vHIT), கலோரி சோதனை மற்றும் மூளை இமேஜிங் [videonystagmography (VNG), Video Head Impulse Test (vHIT), caloric testing, brain imaging] போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தக் க்ளினிக் ஒருங்கிணைத்து பயன்படுத்துகிறது.

அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறுகையில், “இந்தியாவில் அதிகம் கவனிக்கப்படாத ஒரு முக்கியமான சுகாதாரப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான ஒரு அத்தியாவசிய நடவடிக்கையாக ஒருங்கிணைந்த நியூரோ-இ.என்.டி வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் க்ளினிக் தொடங்கப்பட்டுள்ளது. அப்பல்லோ ஒன் [Apollo One]-ல் இம்முயற்சியை அறிமுகப்படுத்துவது மிக முக்கியமான முன்னெடுப்பாகும். ஏனெனில் இது தடுப்பு சுகாதார சோதனைகள் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது. இதன் மூலம், இப்பிரச்சினையானது ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை கடுமையாக பாதிக்கும் முன் இதன் நிலைமை குறித்து அடையாளம் காணவும் உதவுகிறது. எங்களது ஆழ்ந்த அறிவும், அனுபவமும் உள்ள மருத்துவர்களின் நிபுணத்துவத்துடன் அதிநவீன தொழில்நுட்பத்தை ஒன்றிணைப்பதன் மூலம், இச்சிகிச்சைகளில் உயரிய தரத்தை வழங்கவேண்டும் என்பதை இலக்காக கொண்டிருக்கிறோம். மேலும், நாடு முழுவதும் நோயாளிகளை மையமாகக் கொண்ட மேம்பட்ட, சுகாதார சேவையை அளிப்பதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.  உடல்நலப் பராமரிப்பில் முன்னணியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனைகள், எங்களிடம் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு உயரிய சிகிச்சையை வழங்குவதற்காக தொடர்ந்து  எங்களது திறன்களையும், தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

உடல் இயக்க சமநிலை குறைபாடுகள் எனப்படும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் மற்றும் விழும் அபாயத் தடுப்பு (fall prevention) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, வானகரம் அப்போலோ மருத்துவமனை, டான்ஸ் ஃபார் பேலன்ஸ் (Dance 4balance) என்ற முன்முயற்சியை (போட்டி) அறிமுகப்படுத்துகிறது. இந்த வித்தியாசமான முயற்சியின் மூலம் பங்கேற்பாளர்கள், ஒலிக்கப்படும் பிரத்தியேக இசைக்கு ஏற்ப தங்களது நடன அசைவுகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் அன்றாட வாழ்க்கையில் உடல் இயக்க சமநிலைத் தன்மையின் (பேலன்ஸ் – Balance) முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. வெர்டிகோ, உடல் இயக்க சமநிலையற்ற தன்மை மற்றும் வீழ்ந்து விடுவோம் என்கிற அச்சம் போன்ற உடலின் சமநிலை தொடர்பான குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்க இந்த சவால் பொழுதுபோக்காகவும் விழிப்புணர்வுக் கல்வியாகவும் அமையும்.

மேலும், இது தொடர்பான விழிப்புணர்வை ஊக்குவிக்க டிசம்பர் 9-ம் தேதி ஒரு ‘சைக்ளத்தான்’ [Cyclothon] நடைபெறும். வானகரம்  அப்போலோ மருத்துவமனையில் காலை 6.30 மணிக்கு தொடங்கும். இந்நிகழ்ச்சி மதியம் 1.30 மணிக்கு நிறைவடையும்.  சைக்ளத்தானை பாண்டிச்சேரி ஆளுநர் கைலாசநாதன் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். ஓய்வு பெற்ற காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபுவும்  இதில் கலந்து கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here