இந்தியாவிலேயே முதன்முறையாக சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களை ஒருங்கிணைக்கும் வகையில், தமிழ்நாடு உடனடி சாம்பிராணி உற்பத்தியாளர்கள் சங்கம் (The Instant Sambrani Manufacturers Association – TiSMA) சார்பில் பிரம்மாண்டமான TiSMA EXPO 2026 கண்காட்சி மதுரையில் நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்
TiSMA EXPO 2026 கண்காட்சித் தலைவர் ஜே.கே. முத்து, TiSMAசங்கத் தலைவர் டி.எஸ். ஜீயர்பாபு, சங்கச் செயலாளர் சி. செந்தில்குமார், கண்காட்சியின் டைட்டில் ஸ்பான்சரான GT Group of Companies நிறுவனத்தின் ஜிதேந்தர் தோஷி மற்றும் சங்கப் பொருளாளர் எஸ். ராஜசௌந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உடனடி சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் இணைத்து, புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தேசிய அளவிலான பிரத்யேக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். மதுரை ஐடா ஸ்கட்டர் அரங்கில் நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சி, இந்தியாவில் சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் தொழில்துறைக்கென பிரத்யேகமாக நடத்தப்படும் முதல் பிரம்மாண்டமான B2B கண்காட்சியாக அமைய உள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளுடன் இந்தக் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.
பல்வேறு நிறுவனங்களின் சாம்பிராணி, ஊதுபத்தி மற்றும் பாரம்பரிய பூஜைப் பொருட்களை ஒரே இடத்தில் பார்வையிடுவதுடன், தங்களுக்குத் தேவையான பொருட்களையும் நேரடியாக வாங்கிக்கொள்ளலாம். கண்காட்சியைப் பார்வையிட அனைவருக்கும் அனுமதி இலவசம். மதுரையின் பாரம்பரிய உணவுகள் – தென் தமிழக சுற்றுலாவுக்கும் சிறப்பு ஏற்பாடு! இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து கண்காட்சிக்கு வருகை தரும் வர்த்தகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மதுரையின் பாரம்பரிய உணவு வகைகளை ருசிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் சிறப்பு உணவு அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. மேலும், தென் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக தலங்களைப் தலங்களைப் பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில் தென் தமிழ்நாடு டிராவல்ஸ் சங்கத்துடன் இணைந்து பிரத்யேக ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 5,000-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள், வியாபாரிகள்,மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இந்தக் கண்காட்சியைப் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் தமிழ்நாட்டின் சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளை நாடு முழுவதும் சந்தைப்படுத்துவதற்கும், புதிய விநியோகஸ்தர்களை அடையாளம் காண்பதற்கும், வணிகத் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படும். சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் விநியோகத் தொழிலில் புதிதாக ஈடுபட விரும்புவோருக்கு இந்தக் கண்காட்சி சிறந்த வாய்ப்பாக அமையும்.
குறைந்த முதலீட்டில் புதிய விநியோகத் தொழிலைத் தொடங்க விரும்புவோர் உற்பத்தியாளர்களை நேரடியாகச் சந்தித்து வணிக வாய்ப்புகள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும், சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள், ஏற்றுமதி நடைமுறைகள், சர்வதேசச் சந்தை வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்த வழிகாட்டுதல்களும் இந்தக் கண்காட்சியில் வழங்கப்பட உள்ளன. இந்தக் கண்காட்சி வர்த்தகர்களுக்கான நிகழ்வாக மட்டுமின்றி, பொதுமக்களும் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மதுரை ஐடா ஸ்கட்டர் அரங்கில் நடைபெறவுள்ள TiSMA EXPO 2026 கண்காட்சியில் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்றுப் பயனடைய வேண்டும். கண்காட்சியில் பங்கேற்க விரும்புவோர் 93425 93800 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு: +919944426746 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கண்காட்சி குறித்து அறிய tisma.co.in என்ற இணையப் பக்கத்தை பார்வையிடலாம்.
இதற்காக முன்பதிவு செய்யும் பார்வையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் இந்த ஆன்மிகச் சுற்றுலாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் TiSMA EXPO 2026 கண்காட்சி சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் தொழில்துறையின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, மதுரையின் வர்த்தகம், சுற்றுலா, பாரம்பரிய உணவு மற்றும் கலாசாரச் சிறப்புகளை இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் நிகழ்வாகவும் அமையும். தமிழ்நாட்டின் சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் உற்பத்தித் துறையை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வளர்ச்சியடையச் செய்வதும், உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இடையே வலுவான வணிகத் தொடர்புகளை ஏற்படுத்துவதும் இந்தக் கண்காட்சியின் நீண்டகால நோக்கமாகும்.
இவ்வாறு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
















