Tuesday, August 18, 2026
Blog

மஞ்சள் நிற உடை கட்டாயம்!

யோத்தி ராமர் கோயில் அர்ச்​சகர்​களுக்​கான புதிய உடை விதி​முறை கடந்த வெள்​ளிக்​கிழமை முதல் அமலுக்குவந்துள்​ளது. இதன்​படி, பூஜைகள் மற்​றும் வழி​பாட்டு நிகழ்ச்​சிகளை நடத்​தும் அனைத்து அர்ச்​சகர்​களும் பாரம்​பரிய மஞ்​சள் நிற உத்தரீ​யம் (மேலாடை) அணிய வேண்​டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கோயி​லின் சமயக் குழு​வால் இந்த விதி​முறை வகுக்கப்பட்டுள்ளது. தினசரி பூஜை, ஆரத்தி உள்​ளிட்ட சடங்குகளை நடத்​தும் அர்ச்​சகர்​கள், தையல் இல்​லாத மஞ்​சள் நிற உத்​தரீயத்தை அணிய வேண்​டும். இது கோயி​லில் பின்பற்றப்படும் வைஷ்ணவ மரபு மற்​றும் ராமானந்​தா​ச்சார்ய பரம்பரையின் (வைஷ்ணவ சமய குரு​வால் தொடங்​கப்​பட்ட ஆன்மிக பரம்​பரை) அடிப்​படை​யில் வகுக்​கப்​பட்​டுள்​ளது.

தற்​போது நடை​பெற்று வரும் ஜூலனோத்சவ (ஊஞ்​சல்) விழா​வின்​போது இந்​தப் புதிய உடை முதன்​முறை​யாகப் பொது​வெளி​யில் தெளி​வாகக் காணப்​பட்​டது. மஞ்​சள் நிற உத்​தரீ​யம் அணிந்த அர்ச்சகர்​கள், வேத மந்​திரங்​களு​டன் சடங்​கு​களை நடத்​தி, ராம்லல்​லா​வின் உற்சவ மூர்த்​தியை அலங்​கரிக்​கப்​பட்ட பல்லக்கில் வைத்து விழா​வைத் தொடங்கி வைத்​தனர்.

இந்த ஒருங்​கிணைந்த உடை சமய ஒழுங்​கை​யும், அர்ச்​சகர்​களின் ஆன்​மிக அடை​யாளத்​தை​யும் வலுப்​படுத்​தும் என கோயில் அதிகாரி​கள் கருதுகின்​றனர். கூடு​தல் விதி​முறை​கள் படிப்படியாக வரக்​கூடும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அமைச்சர்கள் மீது உதயநிதி விமர்சனம்!

வெக அரசில் அந்தந்தத் துறை அமைச்சர்கள் அந்தந்த துறைக்கான பதிலைச் சொல்ல மறுக்கிறார்கள். உதாரணத்துக்கு சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் தடுப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம். இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். அந்த அமைச்சர் இன்றைக்கு அவைக்கு வரவே இல்லை. அதற்கான பதிலையும் அவர் சொல்லவே இல்லை,” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததும், உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோவையில் மாணவர் அமுதன் 10 நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்துகின்ற கும்பலைப் பற்றி காவல்துறையிடம் விவரங்களையெல்லாம் கூறியதற்காக காவல்துறை என்ன செய்திருக்க வேண்டும்? சரியான நடவடிக்கை எடுத்து, போதைப் பொருளைப் பறிமுதல் செய்திருக்க வேண்டும்.

அந்த மாணவன் அமுதன் யார் மீது புகார் கொடுத்தாரோ, யார் போதைப்பொருள் கடத்துகிறார்கள், யார் விநியோகம் செய்கிறார்கள் என்று கூறினாரோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். அதற்கு மாறாக, அந்த போதைப்பொருள் விநியோகம் செய்கின்ற கும்பலை அழைத்து, `இந்த அமுதன்தான் உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கொடுத்திருக்கிறார்’ என்று கூறியதனால், அந்த போதைப் பொருள் விநியோகம் செய்யும் கும்பல் அமுதனை கிட்டத்தட்ட 20 பேரைக் கொண்ட ஒரு கும்பலாகச் சேர்ந்து அடித்து, 5 நாட்களுக்கு முன்பு படுகொலை செய்திருக்கிறார்கள்.

அதுமட்டுமன்றி, திருவொற்றியூரில் இதேபோல தனுஷ் என்ற மாணவர், 20 பேர் கொண்ட ஒரு கும்பலால் தாக்கப்பட்டு பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இப்படித் தொடர்ந்து போதைப்பொருளால் இன்றைக்குப் பல்வேறு சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கின்றன.

இதையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டும் என்று இந்த அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக இன்றைக்கு நாம் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களும் சட்டமன்றத்தில் அரசின் கவனத்தை ஈர்த்துப் பேசியிருக்கிறோம்.

ஆனால், இதற்கெல்லாம் எந்தவிதமான ஒரு சரியான பதிலும் இந்த அரசிடம் இல்லை. மாறாக எங்கள் மீது மீண்டும் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். தங்களது ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று ஒரு தெளிவான விளக்கம் இல்லாமல், எங்கள் மீது மீண்டும் பழியைப் போடுகின்ற வழக்கத்தையே இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமன்றி, நான் பலமுறை இந்த மூன்று மாதங்களாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்பதே சரியாகத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம் என்றால், இந்த அரசில் அந்தந்தத் துறை அமைச்சர்கள் அந்தந்த துறைக்கான பதிலையே சொல்ல மறுக்கிறார்கள்.

இன்றைக்கு சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம், போதைப் பொருள் தடுப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம். இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். அந்த அமைச்சர் இன்றைக்கு அவைக்கு வரவே இல்லை. அதற்கான பதிலையும் அவர் சொல்லவே இல்லை. இதையெல்லாம் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு வெளிநடப்பு செய்திருக்கிறோம்.” என்றார்.

பின்னர் செய்தியாளர்கள், ‘மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்து கொள்வீர்களா?’ என கேட்டதுக்கு, “மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்துகொள்வோம். முறையான பதில் வேண்டும் என்றுதான் கேட்கிறோம். அதற்கான அமைச்சர்தான் வரவில்லையே? அமைச்சர்தானே எழுந்து பதில் சொல்ல வேண்டும்? சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் யார் என்பது மக்களுக்குத் தெரியும்” என்றார்.

பின்னர், ‘நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா எனக் கேட்கிறாரே?’ என்ற கேள்விக்கு, “அந்த காணொலி எப்போது வெளியே வந்தது? ஒரு மாதத்திற்கு முன்னால் வந்தது. அப்படி காணொலி வந்தால், வந்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியென்றால் இந்த அரசுதானே நடவடிக்கை எடுக்க வேண்டும்? அவரை அழைத்து விசாரித்தார்களா? அப்படியென்றால், அந்த அமைச்சர் ஒப்புக்கொள்கிறாரா, அது போதைப் பொருள்தான் என்று ஒப்புக்கொள்கிறாரா?” என்றார்.

பின்னர், மைதானத்தைச் சுற்றிலும் காவல்துறை இருந்தது என்கிறாரே? என்ற செய்தியாளர்கள் சுட்டிக்காட்ட, “அப்படியென்றால், அது போதைப் பொருள்தான் என்று ஒப்புக்கொள்கிறாரா? நான் என்ன சொல்கிறேன் என்றால், இந்த வீடியோ எப்போது வந்தது? ஒரு மாதத்திற்கு முன்பு வந்தது. எனவே இந்த அரசு அவரை அழைத்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எங்களுடைய அரசாக இருந்திருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம். ஆனால் இந்த வீடியோ வெளிவந்ததே இப்போதுதான்” என்று உதயநிதி கூறினார்.

பயிர் கடன் தள்ளுபடி! முதல்வர் அறிவிப்பு

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் 25.05.2026 அன்று ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி கோரிக்கைகள் வந்தன.

இக்கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சரின் உத்தரவின்படி, கடந்த ஜூன் 15-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, நிதித்துறை மற்றும் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு ஆலோசித்தனர்.

இந்த மறுஆய்வுக் கூட்டத்தின் முடிவில், கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகள் அனைவருக்கும் 100 சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கடந்த நிதியாண்டில் கடன் பெற்ற விவசாயிகளுக்குக் குறைந்தபட்சம் ரூ.35,000 முதல் அதிகபட்சமாக ரூ.75,000 வரை நிதிப் பலன் கிடைக்கப்பெறும்.

இந்திய ரிசர்வ் வங்கி 28.11.2025 அன்று வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, கடன் தள்ளுபடிக்கான முழுத் தொகையையும் அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலைமை மற்றும் நிதி ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு, கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 01.05.2025 முதல் 28.02.2026 வரையிலான காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற சுமார் 14.43 லட்சம் (14,43,504) விவசாயிகள் இதன் மூலம் நேரடியாகப் பயனடைவார்கள். இதற்காக அரசாங்கத்திற்கு சுமார் ரூ.5,932.23 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

பயனாளிகளின் விவரங்களைப் பிரித்துப் பார்க்கும்போது, 8,33,773 குறு விவசாயிகளுக்கு ரூ.3,599.67 கோடியும், 5,16,183 சிறு விவசாயிகளுக்கு ரூ.1,995.42 கோடியும், 93,548 இதர பெரு விவசாயிகளுக்கு ரூ.337.15 கோடியும் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆக மொத்தம் 14,43,504 விவசாயிகளுக்கு ரூ. 5,932.23 கோடி தள்ளுபடித் தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தள்ளுபடி நடவடிக்கை, எதிர்வரும் சாகுபடி பருவத்தில் விவசாயிகள் மீண்டும் புதிய கடன்களைப் பெற்று சுலபமாக விவசாயப் பணிகளைத் தொடரப் பெருமளவில் துணையாக இருக்கும்.

பயிர்க்கடன் இன்றைய முதலமைச்சர் அறிவிப்பு – என்ன வித்தியாசம்?

முன்பு:

ரூ. 75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி
ரூ. 75 ஆயிரத்துக்கு மேலான பயிர்க்கடன்களுக்கு ரூ.35 ஆயிரம் தள்ளுபடி

இன்றைய அறிவிப்பு:

ரூ. 75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி
ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்களுக்கு ரூ.75 ஆயிரம் தள்ளுபடி
ரூ. 1 லட்சத்துக்கு மேலான பயிர்க்கடன்களுக்கு ரூ.35 ஆயிரம் தள்ளுபடி

வித்தியாசம்:

ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்கள் ஏற்கெனவே ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி பெற்றிருப்பார்கள். அவர்கள் தற்போது கூடுதலாக ரூ.40 ஆயிரம் சேர்த்து ரூ. 75 ஆயிரம் தள்ளுபடி பெறுவார்கள்.

‘ஆல் பாஸ்’ இசை வெளியீட்டு விழா!

மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. வடசென்னை மக்களின் எதார்த்தமான வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை One Step Entertainment சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி மைதீன் இயக்கியுள்ள இப்படத்தில் ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘லியோ’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், விக்ரமன், நடிகர் மன்சூர் அலிகான், தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

“இந்தப் படம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது” – தயாரிப்பாளர் மோகனா விழாவில் பேசிய தயாரிப்பாளர் மோகனா, ‘ஆல் பாஸ்’ திரைப்படம் தங்களுக்கு மிகவும் முக்கியமான படைப்பு என்று தெரிவித்தார்.

மேலும், படத்தை ரசிகர்கள் பார்த்து தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்றும், படக்குழுவினருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“உதவி இயக்குநர்களுக்கும் அடையாளம் கிடைக்க வேண்டும்” – இயக்குநர் மைதீன் இயக்குநர் மைதீன் பேசுகையில், தனக்கு ஆதரவாக இருந்த மூத்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

குறிப்பாக, சிக்கலான சூழ்நிலையில் ஒளிப்பதிவாளர் எம்.எஸ். பிரபு வழங்கிய உதவியை நினைவுகூர்ந்தார்.

மேலும், உதவி இயக்குநர்களின் உழைப்பும் வலியும் சினிமாவில் போதிய அளவு கவனிக்கப்படுவதில்லை என்றும், அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும்போதுதான் அவர்களுக்கான அடையாளமும் உருவாகும் என்றும் தெரிவித்தார்.

துஷ்யந்தை கதாநாயகனாக தேர்வு செய்தது குறித்தும் பேசிய அவர், நடிகர் ஜெயப்பிரகாஷிடம் கதையை முழுமையாகக் கூறியதாகவும், கதையில் இடம்பெற்ற ‘அழகர்’ கதாபாத்திரம் அவருக்குப் பிடித்ததால் சம்பளம் குறித்து கூட யோசிக்காமல் நடிக்க முன்வந்ததாகவும் குறிப்பிட்டார்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் கதையை கேட்ட பிறகு படத்தின் மீது நம்பிக்கை வைத்து இசையமைக்க ஒப்புக்கொண்டதாக மைதீன் தெரிவித்தார்.

“இப்படம் கண்டிப்பாக உங்களை திருப்திப்படுத்தும்” என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

“வடசென்னையை வித்தியாசமான கோணத்தில் காட்டுகிறது” – ஆர்.வி. உதயகுமார் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசும்போது, ‘ஆல் பாஸ்’ படத்தின் டிரெய்லரும் பாடல்களும் சிறப்பாக இருப்பதாக பாராட்டினார்.

துஷ்யந்த் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பதாகவும், கதாநாயகி ஜனனி அழகாகவும் சிறப்பாகவும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் இசையையும் பாராட்டிய அவர், திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

“ஜெயப்பிரகாஷுடன் 30 ஆண்டுகால நட்பு” – இயக்குநர் விக்ரமன் இயக்குநர் விக்ரமன் பேசுகையில், நடிகர் ஜெயப்பிரகாஷுடன் தனக்கு சுமார் 30 ஆண்டுகளாக நட்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

‘ஆல் பாஸ்’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களை பார்த்ததாகவும், படத்தில் பணியாற்றியுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

“ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் முக்கியம்” – மன்சூர் அலிகான் நடிகர் மன்சூர் அலிகான், ‘ஆல் பாஸ்’ ஒரு அற்புதமான படம் என்று பாராட்டினார்.

மேலும், திரைப்படத்தில் பணியாற்றும் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் பங்களிப்பை உரிய முறையில் ரசிகர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தனது சினிமா பயணம் மற்றும் தனக்கு ஏற்பட்ட சில மனக்குறைகள் குறித்தும் அவர் விழாவில் வெளிப்படையாகப் பேசினார்.

“வடசென்னையின் இன்னொரு முகத்தை பதிவு செய்கிறது” – தயாரிப்பாளர் தனஞ்செயன் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, வடசென்னை என்றாலே ஆக்ரோஷம், அடிதடி என்ற பிம்பம் தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அங்கு இயல்பான வாழ்க்கை வாழும் மக்கள் அதிகம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அந்த இயல்பான வாழ்வியலை ‘ஆல் பாஸ்’ திரைப்படம் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

குறுகலான தெருக்கள், போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகள் உள்ளிட்ட சவாலான இடங்களில் சுமார் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய தயாரிப்பாளராக களமிறங்கியுள்ள மோகனாவுக்கு வாழ்த்து தெரிவித்த தனஞ்செயன், திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

“இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” – நடிகை ஜனனி நடிகை ஜனனி பேசுகையில், இயக்குநர் மைதீன் முதன்முதலில் கதையை கூறியபோதே தனக்கு மிகவும் பிடித்ததாக தெரிவித்தார்.

கதையின் பின்னணி மற்றும் படப்பிடிப்பு நடைபெறவிருந்த இடங்கள் குறித்த இயக்குநரின் அணுகுமுறை தன்னை கவர்ந்ததாகவும், படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியதாகவும் கூறினார்.

‘ஆல் பாஸ்’ படத்தின் வெளியீட்டை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“இந்தக் கதாபாத்திரத்தை மறக்க முடியாது” – துஷ்யந்த் நடிகர் துஷ்யந்த் பேசும்போது, தனக்கு ஒரு பாசிட்டிவான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் மைதீன் மற்றும் தயாரிப்பாளர் மோகனா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

தனது தந்தை ஜெயப்பிரகாஷுடன் இணைந்து நடித்திருப்பது தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறினார்.

மேலும், தனது முதல் படமான ‘ஈசன்’ திரைப்படத்திலிருந்து தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்த துஷ்யந்த், வடசென்னையை இயக்குநர் மைதீன் வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

“இப்படம் பார்க்கும்போது மன அமைதி கிடைக்கும்” – ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசுகையில், படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் சிறப்பாக உழைத்துள்ளதாக தெரிவித்தார்.

வன்முறை அதிகம் இடம்பெறும் சில திரைப்படங்களைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வு ‘ஆல் பாஸ்’ படத்தைப் பார்க்கும்போது ஏற்படாது என்றும், இந்தப் படம் பார்வையாளர்களுக்கு மன அமைதியை வழங்கும் வகையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், இயக்குநர் மைதீன் வடசென்னையை இதுவரை யாரும் காட்டாத கோணத்தில் பதிவு செய்துள்ளதாகவும், திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

‘மகுடம்’ விமர்சனம் RATING 2.9/5

சூப்பர் குட் பிலிம்ஸ் பி. சுரேஷ், ஜீவா தயாரிப்பில், நடிகர் விஷால் இயக்கத்தில், நடிகர் விஷால், அஞ்சலி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மகுடம்’

விமர்சனம்:

மருந்து விற்பனைப் பிரதிநிதியான விஷால், மனைவி துஷாரா விஜயன் மற்றும் இரு குழந்தைகளுடன் எளிய வாழ்க்கை நடத்தி வருகிறார். குறைந்த சம்பளத்திலேயே மனநிறைவுடன் வாழும் அவர், நீண்டநாள் கனவான கார் வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். புதிய கார் வாங்க இயலாததால் பழைய கார் ஒன்றை வாங்குகிறார். அந்தக் காரால் அவரது குடும்பத்தை ஆபத்து பின்தொடர, மனைவியும் மகளும் கொல்லப்படுகிறார்கள்.

தன் மனைவி மற்றும் மகள் கொலைக்குத் தனது தந்தையே காரணம் என்று நம்பும் விஷாலுக்கு ஆத்திரம் அதிகரிக்கிறது. அப்போது தந்தை அவரைச் சந்திக்க வருகிறார். ஆனால் அவரைப் பார்க்க விரும்பாத விஷால், அவமதித்துத் திருப்பி அனுப்பிவிடுகிறார். விஷால் தன் தந்தை மீது கோபம் கொள்ளக் காரணம் என்ன? அவரது தந்தை யார்? மனைவி, மகளைக் கொன்றவர்களை விஷால் என்ன செய்தார்? என்பதே கதை…

விஷால் கதாபாத்திரம் அவருக்காகவே உருவாக்கப்பட்டதைப் போல இருந்தது, அதற்கேற்ப அவர் நடித்திருந்தார். துஷாரா விஜயன் தன் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். அஞ்சலி திரையில் அழகாகத் தெரியவில்லை, மேலும் அவர் வசனங்களை உரத்த குரலில் பேசினார். ஜான் விஜய் தன் கதாபாத்திரத்தில் பரவாயில்லை. ஜெயபிரகாஷ் தன் இருப்பை உணர்த்தினார். அஜய், வம்சி கிருஷ்ணா, அபு சலீம், அர்ஜய், ஜான்சி, பதம் குமார், சபுமோன் போன்ற மற்றவர்களும் தத்தமது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருந்தனர்.

அப்பா விஷாலுக்கு இணையாக நடித்திருக்கும் அஞ்சலி, மீன் விற்பனையாளர் பாத்திரத்திற்குப் பொருத்தமாக இருந்தாலும் நடிப்பில் சற்று அதிகப்படியாகவே தெரிகிறது. விஷால் கதாபாத்திரத்தின் வருகை, குறைந்தபட்சம் இரண்டாம் பாதியிலாவது கதையை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இரண்டாம் பாதியில் கதை சொல்லும் விதம் ஒரு புதிய தாழ்நிலைக்குச் செல்கிறது.

விஷால், துஷாரா விஜயன் இடம்பெறும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமான தொடர்பு இல்லாமல், அவை சலிப்பூட்டுவதாகத் தெரிகின்றன. மேலும், தம்பி ராமையாவுடனான நகைச்சுவை என்று சொல்லப்படுபவை எடுபடவில்லை. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் வணிக அம்சங்களுடன் வந்துள்ளன. பின்னணி இசை அதிரடி மற்றும் ஆரவாரமான காட்சிகளுக்கு வலு சேர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.

மைனஸ்: அப்பா கதாபாத்திரம் விஷாலுக்கு எடுபடவில்லை… சண்டை காட்சிகள் லாஜிக்கே இல்லை… கதையை விஷால் இனிமேல் தெளிவாக தேர்ந்தெடுக்க வேண்டும்….

மொத்தத்தில் இந்த ‘மகுடம்’ அணிந்தால் காது வலி இலவசம்!

‘விஸ்வநாத் & சன்ஸ்’ விமர்சனம் RATING 3.2/5

யக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

விமர்சனம்:

துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவிற்காக பங்கேற்கும் சஞ்சய் விஸ்வநாதனின்(சூர்யா) பாதுகாப்பு பெட்டகத்தையும் அதில் உள்ள துப்பாக்கியை முடித்து விடுகிறார் சமூக விரோதிகள். அவர்களின் சதியை முறியடித்து விஸ்வநாதன் தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு திரும்புகிறார். தனது தாய்க்கு நடந்த நிலைமையை எண்ணி திருமணத்தை வெறுக்கிறார் சஞ்சய் விஸ்வநாத் 40 வயதைக் கடந்த தொழிலதிபரான சஞ்சய் விஸ்வநாத் தனது தாயாரின் திருமண வற்புறுத்தலால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கிறார். எதிர்பாராத சூழ்நிலையால் வாடகைத்தாய் மேடி (மமிதா பைஜு) அவர் குடும்பத்திற்குள் வருகிறார். அதன் பிறகு இருவருக்கும் இடையே ஏற்படும் பிணைப்பும், குடும்பத்திற்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களுமே படத்தின் கதை.

வயது வித்தியாசத்தை நாகரிகமாகவும், நகைச்சுவை கலந்த குடும்ப உணர்வுகளுடனும் கையாண்ட விதம் அருமை. ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ, சுனில் ரெட்டி மற்றும் நாசர் ஆகியோர் தத்தமது துணை வேடங்களில் தங்கள் இருப்பை அழுத்தமாக வெளிப்படுத்துகின்றனர். தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை இனிமையாகவும் இதமாகவும் இருந்து, இப்படத்தை ஒரு குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாகவே வைத்திருக்கிறது. நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு, படத்திற்கு ஒரு செழுமையான மற்றும் நேர்த்தியான காட்சி அழகைச் சேர்க்கிறது. கே.என். விஜயகுமாரின் வசனங்கள், குறிப்பாக உறவுகள் மற்றும் குடும்பப் பிணைப்புகளைச் சுற்றியுள்ளவை, கதையுடன் நன்றாகப் பொருந்துகின்றன.

இரண்டாம் பாதி, குழந்தையையும் சஞ்சய் மற்றும் மேடி இடையேயான உறவையும் தாண்டி, அதிக உணர்ச்சிப்பூர்வமான பாதையை நோக்கிச் செல்கிறது. சஞ்சய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட, கதை படிப்படியாகக் குடும்பத்தின் பரந்த உறவு வட்டத்தை ஆராய்கிறது. குடும்பப் பிணைப்புகளின் முக்கியத்துவமும், ஒற்றுமையாக இருப்பதும் மையக் கருவாக அமைகிறது.

இரண்டாம் பாதி ஆரம்பத்தில் முதல் பாதியின் தொனியிலிருந்து மாறுபட்டதாகத் தோன்றினாலும், வெங்கீ அட்லூரி ஆரம்பக் கட்டங்களில் சிறு சிறு பகுதிகள் மூலம் இந்தக் குடும்பப் பிணைப்புகளைத் திறமையாக நிலைநிறுத்துகிறார். இது இறுதியில் இப்படத்தை ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக ஒன்றிணைய உதவுகிறது.

மைனஸ்: கதையில் கூடுதல் கவனம் தேவை….

மொத்தத்தில் இந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ குடும்ப பிணைப்பு.

‘விசிட் மலேசியா – 2026 சுற்றுலாத் திட்டம்’

‘விசிட் மலேசியா – 2026 சுற்றுலாத் திட்டம்’ அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது!

லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக, மலேசிய அரசு முன்னெடுத்திருக்கும் ஒரு முக்கிய முயற்சியே விசிட் மலேசியா சுற்றுலா திட்டம் (Visit Malaysia 2026).

மில்லியன் கணக்கனான சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தை சுற்றுலா வருவாய் மூலம் மேம்படுத்தவும், கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமே இதன் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் Tourism மலேசியா அமைப்பின் சார்பில் “விசிட் மலேசியா 2026 சுற்றுலாத் திட்டம்” தொடர்பாக, Tourism மலேசியா அமைப்பின் தலைமை இயக்குநர் முகமது அமீருல் ரிசல் அப்துல் ரகீம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “உலகளாவிய சுற்றுலாத் துறை தொடர்ந்து மாறிவரும் சூழலில், மலேசியாவின் முக்கிய சர்வதேச சுற்றுலா சந்தைகளில் ஒன்றாகிய இந்தியாவில், தனது ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்த, மலேசிய சுற்றுலாத் துறை தனது “சேல்ஸ் மிஷன் சீரிஸ் -2” (Salos Mission Series 2) என்னும் சுற்றுலா வர்த்தக நிகழ்வை நடக்கிறது.

இது, ஆகஸ்ட் 12 முதல் ஆக 20, 2026 வரை சென்னை, மும்பை மற்றும் புது டெல்லி ஆகிய முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறோம். இதன் மூலம் இந்திய சுற்றுலா சந்தையுடனான வலுவான தொடர்பை மலேசியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது” என்றார்.

மேலும், “வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் தேர்வு செய்யும் கோலாலம்பூர் (Kualalumpur) மற்றும் கென்டிங் ஹைலண்ட்ஸ் (Genting Highlands) பயணத் திட்டங்களைத் தாண்டி, மலேசியாவின் பிற பகுதிகளையும் கண்டு களிக்க இந்தியப் பயணிகளை ஊக்குவிக்க விரும்புகிறோம்” எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மலேசியா டூரிசம் தென்னிந்திய பொது மேலாளர் சரவண குமார் கூறும்போது, விசிட் மலேசியா 2026′ சுற்றுலாத் திட்டம், 2027ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

5G ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய காவேரி மருத்துவமனை!

5G ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கும் காவேரி மருத்துவமனை நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தொலைதூரத்திலிருந்தே
மருத்துவ ஆதரவுடன் தொடர் பராமரிப்பை நோயாளிகளுக்கு இது வழங்கும்

● இந்தத் தொடர் கண்காணிப்பு வசதியின் மூலம், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே அவர்களின் உடல்நிலையை உடனுக்குடன் கண்காணித்து, ஆம்புலன்ஸில் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் மருத்துவர்களால் வழங்க முடியும்.


● சென்னை மாநகரத்தில் இயங்கும் காவேரி மருத்துவமனைகளில் 30-க்கும் மேற்பட்ட நவீன ஆம்புலன்ஸ்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளன. பச்சிளம் குழந்தைகள், சிறார்கள், நரம்பியல் மற்றும் இதய பாதிப்புகள் மற்றும் பிற அவசர சிகிச்சை உட்பட அனைத்து வகையான மருத்துவ சிகிச்சைத் தேவைகளுக்கும் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் அவசர சிகிச்சையை இந்த ஆம்புலன்ஸ்கள் வழங்குகின்றன.

சென்னை:

  • நோயாளிகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் (CPMS) வசதி கொண்ட 5G ஆம்புலன்ஸ் சேவையை காவேரி மருத்துவமனை, சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே, மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் நோயாளியின் உடல்நிலையை உடனுக்குடன் கண்காணித்து, ஆம்புலன்ஸில் உள்ள மருத்துவக் குழுவினருக்கு நோயாளிக்கு வழங்க வேண்டிய அவசர சிகிச்சை குறித்து ஆலோசனைகளை வழங்கி அவர்களை வழிநடத்த முடியும்.

இந்த சேவையை சென்னை பெருநகர காவல் ஆணையரும், காவல் துறையின் கூடுதல் தலைமை இயக்குநருமான திரு. A. அமல்ராஜ் ஐபிஎஸ் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் காவேரி மருத்துவமனைக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். மணிவண்ணன் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

ஆழ்வார்பேட்டை, வடபழனி, ரேடியல் சாலை மற்றும் மா காவேரி ரேடியல் சாலை ஆகிய இடங்களில் இயங்கி வரும் காவேரி குழுமத்தின் மருத்துவமனைகளில் 30-க்கும் மேற்பட்ட இந்த நவீன ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. பச்சிளம் குழந்தைகள், சிறார்கள், நரம்பியல் மற்றும் இதய பாதிப்புகள் உள்ள நோயாளிகள் மற்றும் பிற அவசர சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அவசர காலங்களில் உயிர்காக்க உதவும் மருத்துவ சிகிச்சையையும், முதலுதவியையும் இவைகள் வழங்குகின்றன. விரைவான சேவையை உறுதி செய்வதற்காக சென்னையின் பல்வேறு இடங்களில் இந்த ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் தொகை, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளைக் கருத்தில் கொண்டு இந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பூந்தமல்லி நெடுஞ்சாலை, போரூர், கிளாம்பாக்கம்-வண்டலூர் சாலை, வெளிவட்டச் சாலை, காரப்பாக்கம்-ஓஎம்ஆர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், அடையாறு, கிண்டி, மேடவாக்கம் மற்றும் கேளம்பாக்கம் போன்ற முக்கிய இடங்களில் இந்த ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாநகரின் முக்கியப் பகுதிகளில் இந்த நவீன ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருப்பதால், மருத்துவமனையை சென்றடையும் பயண நேரம் குறைவதோடு, அவசரமான மருத்துவ நெருக்கடி சூழ்நிலைகளில் நோயாளிகளுக்கு மிக விரைவாக சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.

மருத்துவமனையில் உள்ள சிபிஎம்எஸ் கட்டுப்பாட்டு அறை, அவசர அழைப்பு வந்த அடுத்த நொடியே செயல்படத் தொடங்கும். ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் உதவியோடு, அழைப்பு வந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள ஆம்புலன்ஸை அது உடனடியாக அனுப்பி வைக்கும். நோயாளியைப் பற்றிய முக்கியத் தகவல்களைக் கட்டுப்பாட்டு அறைக் குழுவினர் சேகரித்து ஆம்புலன்ஸ் குழுவுக்கு வழங்குவர். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ‘கோல்டன் ஹவர்’ எனப்படும் மிக முக்கியமான நேரத்திற்குள் நோயாளிகளுக்குத் தேவைப்படுகிற மற்றும் உயிர்காக்கும் சிகிச்சை விரைவாக கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

இந்த ஆம்புலன்ஸ்களில் வென்டிலேட்டர், டிஃபிப்ரிலேட்டர், மருந்து மற்றும் இரத்தத்தை உட்செலுத்தும் பம்புகள் மற்றும் மானிட்டர்கள் உள்ளிட்ட உயிர் காக்கும் உபகரணங்கள் அனைத்தும் உள்ளன. நோயாளியின் ஆக்சிஜன் அளவு (SpO2), ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் சுவாச நிலை போன்ற முக்கியத் தகவல்களை IoT தொழில்நுட்பம் மூலம் மருத்துவமனைக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கும் வசதியும் இதில் உள்ளது.

மக்கள் அடர்த்தியாக வசிக்கும் மற்றும் அதிக போக்குவரத்து நெரிசலுள்ள பகுதிகளிலும் கூட, நோயாளியின் தகவல்கள் அதிவேகமாக மருத்துவமனைக்குச் சென்றடைவதை 5G இணைய இணைப்பு வசதி ஏதுவாக்கும். இதனால் ஆம்புலன்ஸ் மருத்துவமனையை சென்றடைவதற்கு முன்பே, நோயாளியின் உடல்நிலையை மருத்துவர்கள் மதிப்பீடு செய்து சிகிச்சையை உடனடியாக தொடங்க தயாராகி இருப்பார்கள். இதன் மூலம் சற்றும் தாமதமின்றி பொருத்தமான சிகிச்சை செயல்முறைகளை விரைவாக தொடங்கி நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முடியும்.

இந்நிகழ்வில் பேசிய திரு. A. அமல்ராஜ் ஐபிஎஸ் அவர்கள், “சென்னை போன்ற பெருநகரங்களில் மருத்துவ அவசர நிலைகளின்போது மிக துரிதமாக ஒருங்கிணைப்புடன் செயல்படுவது மிக முக்கியம். நோயாளி மருத்துவமனைக்கு வரும் முன்பே அந்நபருக்கு தேவையான முதலுதவி சிகிச்சையை வழங்குவது அவசியம். நிகழ்நேர கண்காணிப்பு, மருத்துவ நிபுணத்துவம் மற்றும் சிறப்பான ஒருங்கிணைப்புடன் செயல்படும் இதுபோன்ற முன்னெடுப்புகள் ஒட்டுமொத்த அவசர சிகிச்சை அமைப்பை வலுப்படுத்துவதோடு பொதுமக்களுக்கு மிகவும் நம்பகமான சேவையாக இருக்கும்,” என்று கூறினார்.

காவேரி மருத்துவமனைக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். மணிவண்ணன் செல்வராஜ் கூறுகையில், “அவசர சிகிச்சையில், ஆம்புலன்ஸ் பணியாளர்களும் மருத்துவமனை நிபுணர்களும் ஒருங்கிணைந்து விரைவாக செயல்படுவது நோயாளிகளின் உயிர்களைக் காக்க மிகவும் அவசியம். இந்த 5G ஆம்புலன்ஸ் சேவை மூலம், எங்களது மருத்துவக் குழுவினர் ஆரம்பத்திலிருந்தே தேவையான ஆலோசனைகளை ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு வழங்கி, நோயாளி மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்கு முன்பே உரிய சிகிச்சையை உறுதி செய்கின்றனர்,” என்றார்.

காவேரி மருத்துவமனைக் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “அவசர சிகிச்சை என்பது விரைவாகச் செயல்படுவது மட்டுமின்றி, அந்த நேரத்தில் எடுக்கப்படும் சரியான மருத்துவ முடிவுகளையும் பொறுத்தது. இந்த நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியால், மருத்துவமனைக்கு அப்பால் இருக்கும் நோயாளிகளையும் எங்களால் கண்காணிக்க முடிகிறது. தேவையான வழிகாட்டல்களை ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு உடனடியாக வழங்கி மருத்துவமனைக்கு அழைத்து வரும்போதே நோயாளியின் உடல்நிலையைச் சீராக்க இது பெரிதும் உதவும்,” என்று தெரிவித்தார்.

‘காவேரி கேர்’ செயலியிலுள்ள ஒரே ஒரு ‘SOS’ பட்டனை அழுத்துவதன் மூலமும் இந்த 5G ஆம்புலன்ஸ் சேவையைப் பெறலாம். இதை அழுத்தியதும், மருத்துவமனைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து உடனடியாக அழைப்பு வரும். மேலும், 24/7 வீடியோ அழைப்பின் மூலம் மருத்துவரிடம் தொடர்பு கொண்டு பேசி, ஆம்புலன்ஸ் வரும் வரை நோயாளிகளுக்குத் தேவையான முதலுதவி ஆலோசனைகளைப் பெற்று அவற்றைச் செயல்படுத்தலாம்.

மருத்துவ சிகிச்சை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்த்து, கூடிய விரைவில் உயிர்காக்கும் சிகிச்சையைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டு காவேரி மருத்துவமனை நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சென்னை முழுவதும் மாதத்திற்குச் சராசரியாக 1100 அவசரநிலை நேர்வுகளில் இந்த ஆம்புலன்ஸ் சேவை உதவுகிறது.

இந்த ஆம்புலன்ஸ் சேவையைப் பெற 044 4000 6000 என்ற 24×7 அவசர உதவி எண்ணையோ அல்லது ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் கிடைக்கும் ‘காவேரி கேர்’ செயலியையோ தொடர்பு கொள்ளலாம்.

இது எனக்கு சவாலான படம்- நடிகர் & இயக்குனர் விஷால் பேச்சு

குடம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில்
 
நடிகர் விஷால் பேசியதாவது:
 
அனைவருக்கும் வணக்கம்
 
ஸ்ரீகாந்த் சாரோடு உட்கார்ந்து எடிட்டிங் வேலை பார்க்கணும். தெலுங்கு டப்பிங் வேலை  இருக்கு. அப்புறம் ஜிவி பிரகாஷ் ஸ்டுடியோவிற்கு போகணும். நிறைய வேலை இருக்கு. எனக்கு முதல்ல இந்தத் திரைப்படத்தை அமைச்சு கொடுத்த ஆர்.பி செளத்ரி சாருக்கு நன்றி. அவர் நிறைய நம்பிக்கையைக் கொடுத்தார். மேலும் 14  மாதங்கள் படம் நடிக்காமல் மிகுந்த சிரமத்தில் இருக்கும் போது எனக்கு உறுதுணையாக இருந்து இந்த நொடிவரை உடன் நின்றிருக்கிறார் என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா. வேற யாராவது இருந்தால் பிச்சிக்கிட்டு ஓடிருப்பாங்க. திருப்பூர் சுப்பிரமணியன் அண்ணன் எனக்கு கொடுத்த ஊக்கமும்,என்மேல் வைத்த  நம்பிக்கையும்  வீண்போகக்கூடாது என்பதற்காக அதிகமாக உழைத்தேன். அவர் கொடுத்த ப்ளாட்பார்ம் தான் இந்த மகுடம் படத்தை வெற்றிப்படமாக மாற்றப்போகிறது. அவருக்கு நான் நன்றி தெரிவிச்சுக்கிறேன். 
 
படத்தில் நடித்த என்னுடைய சக நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நான் நன்றி சொல்லவேண்டும். இது எனக்கு சவாலான படம். கேமராவிற்கு முன்னாடியும் பின்னாடியும் வேலை நிறைய இருந்தது. ஆக்சன் சொல்லி விட்டு சில நொடிகள் கழித்தே அனைவரையும் நடிக்கச் சொன்னேன். ஏனென்றால் எடிட்டிங் பாயிண்டில் எனக்கு அது உதவியாக இருக்கும் என்பதால். மேலும் என் கலைஞர்கள், ” இவன் ஏன் நடிக்கச் சொல்லித் தர்றேன், இவன் ஏன் இசையில் தலையிடுறான், இவன் ஏன் ஸ்டண்ட்டுக்கு வந்து ஐடியா சொல்றான், என்று யாரும் என்னைச் சொல்லவில்லை.
 
இந்த ஈகோ இல்லாத கூட்டத்தால் தான் மகுடம் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது. நடிகர்களிடம் எப்படி வேலை வாங்கவேண்டும் என்று கத்துக்கிட்டது இயக்குநர் பாலா அண்ணனிடம்.  துஷாரா,அஞ்சலி, ஜான் விஜய், மாயா, அஸ்வின் உள்பட எல்லா நடிகர்களும் நான் சொல்வதை ஏற்று நடித்தார்கள். இயக்குநராக வேண்டும் என்பது என் 35 வருட கனவு. அர்ஜுன் சாரிடம் என்னை உதவிய இயக்குநராக சேர்ப்பதற்கு நான்குமணி நேரம் என் அப்பா காத்திருந்தார். என்னை ஊக்கப்படுத்தி இன்று என் கனவை நிறைவேற்றி வைத்த அப்பாவிற்கு என் நன்றியை தெரிவிச்சுக்கிறேன். அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கேன்
 
சண்டைக்கோழி படம் வரக்காரணம் என் அம்மா தான். என் அப்பாவிடம் நீங்க செலவு பண்ணலன்னா நான் செலவு பண்றேன் என்று சொல்லி சண்டக்கோழி படத்தில் நடிக்க வைத்தார். அப்பா அம்மா இருவருமே என் கரியரில் எனக்கு ரொம்ப முக்கியம். ஆர்.பி செளத்ரி சார் அறிமுகப்படுத்திய 45-ஆவது புதுமுக இயக்குநர் நான். சூபர் குட் பிலிம்ஸின் 99-ஆவது படம் இது. இந்த இடத்தில் என் குருநாதர் ஆக்சன் கிங் அர்ஜுன் சாருக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
 
அவர் தான் என்னை நடிக்க வச்சார். அவரிடம் நான் இயக்குநராக நிறைய கத்துக்கிட்டேன். ராம்கோபால்வர்மாவோட உதயம் படம் பார்த்து நான் இயக்குநராகணும்னு நினைச்சேன். இன்னைக்கி வந்து அது நனவாகியிருக்கு. நம் கனவுகளில் நாம் கான்பிடன்டாக இருந்தால் நிச்சயமாக அது நிறைவேறும். அது எனக்கு மட்டுமல்ல. எல்லாருக்கும் தான். சினிமாத்துறையில் மட்டுமல்ல எல்லாத்துறைக்கும் நான் சொல்வது பொருந்தும். 
 
இன்னைக்கு என் பசங்க நிறையபேர் பட்டதாரிகளா இருக்காங்கன்னா அது அவங்களோட  Will power ah தான். 
எனக்கு இந்தத் திரைப்படத்தில் கேமராமேனாக அமைந்த தம்பி ரிச்சர்ட் எனக்கு ரொம்ப வருசமா பழக்கம். அவருக்கு என் டேஸ்ட் புரியும். சுந்தர் சி சார் எல்லாச் சூழலையும் இலகுவாக கையாள்வார். நான் அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். பொன்.பார்த்திபன் சார் எனக்கு நன்றாக சிங் ஆகும் டயலாக் ரைட்டர்.
 
ஜிவி பிரகாஷ் ஆர். ஆர் வாசித்துக்கிட்டிருக்கார் அதான் வரல. ஜிவி என்ற இசையமைப்பாளர் புதுமுக இயக்குநர்களுக்கு ஒரு வரம். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அவர் இந்தப்படத்திற்கு Life கொடுத்திருக்கிறார்.
 
உமாதேவி, ஏகாதசி, விவேக், கருணா  ஆகியோரின் வரிகளுக்கு நன்றி. திலீப்போட புரிதலுக்கு நன்றி. 
இந்தப்படத்திலுள்ள க்ளைமாக்ஸ் காட்சி வேறு எந்தப்படத்திலும் வந்ததில்லை. படம் கடைசி எட்டுநிமிடம் மேஜிக் செய்யும். 
 
எனக்குப் பிடித்த நடிகர் விஜய் இன்று முதல்வராக இருக்கார். அவர் படத்தை நான் எப்படி ரசிச்சுப் பார்ப்பேனோ அதே ரோஹினி தியேட்டரில் என் மகுடம்  படத்தையும் பார்க்கப் போறேன்
 
ஜான் விஜய்யால் லயோலா காலேஜில் பெரிய கலவரமே நடந்திருக்கு. அப்போதே எனக்கு அவரை நன்றாக தெரியும். அவரின் இயல்பான மேனரிஜத்தை படத்தில் பயன்படுத்தியுள்ளேன். இளையராஜா சாருக்கு மிக்க நன்றி. அவர் இசையை நான் பயன்படுத்தி இருக்கிறேன். மீடியாவிற்கு ரொம்ப நன்றி. படம் 14-ஆம் தேதி வெளியாகிறது. 
 
படத்திற்கு இன்னும் சில சிக்கல்கள் இருக்கிறது. அதைத்தாண்டி படம் வெளிவரும். 16-ஆம் தேதி வெற்றிவிழாவில் சந்திக்கிறேன். அப்போது நிறைய விசயங்களைச் சொல்கிறேன். படத்தைத் தியேட்டரில்  பாருங்கள் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்”
என்றார்
 
 
 

மனித உரிமைகள் மற்றும் மதச் சுதந்திர மாநாடு!

சென்னை:
 
மனித உரிமைகள் மற்றும் மதச் சுதந்திரம் தொடர்பான மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், மதப் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
 
தென் கொரியாவைச் சேர்ந்த 95 வயதான அமைதி செயற்பாட்டாளரும் தலைவருமான லீ மான்-ஹீ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பது தொடர்பான கவலைகள் குறித்து மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அவரது வயது மற்றும் உடல்நிலை உள்ளிட்ட மனிதாபிமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அவரது வழக்கில் மனிதாபிமான அணுகுமுறை, உரிய சட்ட நடைமுறை மற்றும் மனித கண்ணியத்திற்கான மரியாதை ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
 
95 வயதானவரின் தடுப்புக்காவல் குறித்து கவலை:
 
95 வயதான தலைவர் லீ மான்-ஹீ தற்போது தென் கொரியாவில் தடுப்புக்காவலை எதிர்கொண்டு வருவது குறித்து மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் கவலை தெரிவித்தனர். அவரது வயது, உடல்நிலை மற்றும் வயது முதிர்ந்த ஒருவரை தடுப்புக்காவலில் வைத்திருப்பதால் ஏற்படக்கூடிய மனிதாபிமான விளைவுகள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர்.
 
தென் கொரியாவின் அரசியல் கட்சிகள் தொடர்பான சட்டத்தின் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தலைவர் லீ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர் தப்பிச் செல்லக்கூடும் அல்லது ஆதாரங்களில் தலையிடக்கூடும் என்ற அதிகாரிகளின் கவலைகள் அவரது தடுப்புக்காவலுக்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
 
எனினும், தலைவர் லீயின் வயது முதிர்வு மற்றும் சர்வதேச அளவில் அவருக்குள்ள பொதுவான அறிமுகம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, அவரை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைத்திருப்பது உண்மையில் அவசியமானதா மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ற அளவான நடவடிக்கையா என பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், கணிசமான காலமாக விசாரணை ஏற்கனவே நடைபெற்று வருவதுடன், கணிசமான அளவு ஆதாரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தொடர்ந்து தடுப்புக்காவலில் வைப்பதன் அவசியம் குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
 
சர்வதேச அளவில் பரவலாக அறியப்பட்ட நபராக இருப்பதால், அவர் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் செல்வது கடினம் என்றும் பிரதிநிதிகள் வாதிட்டனர்.
 
தலைவர் லீ மான்-ஹீ யார்?
 
தலைவர் லீ மான்-ஹீ, 2013ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சர்வதேச அமைதி அமைப்பான Heavenly Culture, World Peace, Restoration of Light (HWPL)-ன் நிறுவனர் ஆவார். பல தசாப்தங்களாக பல்வேறு நாடுகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களிடையே அமைதி, நல்லிணக்கம், மதங்களுக்கு இடையிலான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். கொரியப் போரின் அனுபவத்தை நேரடியாக எதிர்கொண்ட தலைவர் லீ, எதிர்கால தலைமுறைகள் போரின் அழிவை அனுபவிக்காத வகையில் அமைதியை மேம்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 
அமைதிக் கல்வி, சர்வதேச மாநாடுகள், மதங்களுக்கு இடையிலான உரையாடல்கள் மற்றும் சமூக அடிப்படையிலான பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அவரது அமைதிப் பணிகள் பல நாடுகளுக்கு விரிவடைந்துள்ளதாக கூறப்பட்டது.
 
தலைவர் லீ மான்-ஹீ, Shincheonji Church of Jesus அமைப்பின் தலைவரும் நிறுவனருமாவார்.
 
இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பல்வேறு தன்னார்வ மற்றும் சமூக சேவை நடவடிக்கைகளில் பங்கேற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, ரத்ததான முகாம்கள், சுற்றுச்சூழல் தூய்மைப் பணிகள், பேரிடர் நிவாரணப் பணிகள் மற்றும் உதவி தேவைப்படும் மக்கள் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளிலும் அவர்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்பட்டது. இந்த தன்னார்வப் பணிகள் மனிதநேயம், சமூகப் பொறுப்பு மற்றும் பிறருக்கு நடைமுறை ரீதியாக சேவை செய்யும் மனப்பான்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 
அவரது தடுப்புக்காவல் குறித்து பிரதிநிதிகள் ஏன் கேள்வி எழுப்பினர்?
 
தடுப்புக்காவல் நடவடிக்கை என்பது அவசியம், அளவான நடவடிக்கை மற்றும் உரிய சட்ட நடைமுறை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும் என பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டுள்ள காரணங்கள் 95 வயதான ஒருவரை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைத்திருப்பதை நியாயப்படுத்துவதற்கு போதுமானவையா என அவர்கள் கேள்வி எழுப்பினர். தலைவர் லீயின் வயது முதிர்வு மற்றும் மனிதாபிமான சூழ்நிலைகள் உரிய முறையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும், அவரது வழக்கு நியாயமாகவும் வெளிப்படையாகவும் கையாளப்பட வேண்டும்.
என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.