சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று மேலும் ரூ. 10 குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை உச்சத்தில் இருந்து வந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.210 வரை சிறிய கடைகளில் விற்பனை செய்யப்பட்டது.
தற்போது கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாள்களாகவே தக்காளி விலை தொடா்ந்து குறைந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் நேற்று ரூ. 40 வரை விற்பனையான தக்காளி திங்கள்கிழமை காலை ரூ. 30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ரூ.210 வரை விற்கப்பட்ட தக்காளியின் விலை குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.