சென்னை கொளத்தூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு, இடம் பற்றாக்குறையால் M3 புழல் காவல் நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. அதில் நிலைய எழுத்தாளராக SSI S.ஞானசேகரன் பணிபுரிந்து வருகிறார். காவலர்கள் யாராவது விடுப்பு கேட்டால் SSI ஞானசேகரன் அவர்கள் காரணத்தை எழுதி காவல் ஆய்வாளரிடம் ஒப்புதல் கையெழுத்து வாங்குவது வழக்கம். இப்படி இருக்க M. முத்துக்கனி (WHC-43420) என்ற பெண் காவலர் 2026 மே மாதம் 23 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை CL விடுப்பு கேட்டுள்ளார். அதற்கு பெண் ஆய்வாளர் M.சுகிலா அவர்கள் கையெப்பம் போட்டு ஒப்புதலும் அளித்துள்ளார். ஆனால் வருகை பதிவேட்டில் பார்த்தால் சரியாக சிகப்பு நிற பேனாவால் ABSENT போடாமல் 27 ஆம் தேதி மற்றும் 28 ஆம் தேதி பணி செய்தது போல் மாற்றியுள்ளார் SSI S ஞானசேகரன். மேலும் பணியில் இருப்பது போல் மாற்றி M.முத்துக்கனி அவர்களுக்கு அரசாங்கத்திடம் உணவு படி FEEDING & மிகை ஊதியம் EDR பணம் கிடைக்க வழி செய்துள்ளார். இந்த ஒப்புதலுக்கு ஆய்வாளர் M.சுகிலா அவர்கள் எப்படி கையெப்பம் போட்டார்? மற்றும் அனைத்து வருகை பதிவேடுகளையும், வங்கிப் பரிவர்த்தனை (Bank Transactions) விவரங்களையும் காவல் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தினால் தான் பல்வேறு உண்மை தெரியவரும்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சென்னை மாநகரக் காவல் துறையினர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். கடினமான பணிச்சூழலில் பணியாற்றும் இவர்களது மாதச் சம்பளம், தமிழ்நாடு அரசு வழங்கும் 7-வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) விதிமுறைகளின்படி கணக்கிடப்படுகிறது. சென்னை காவலர்களின் சம்பளம் முழுக்க முழுக்க அரசு நிதியிலிருந்து நேரடி வங்கிப் பரிமாற்றம் (Direct Benefit Transfer) மூலமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும் அல்லது அதற்கு முந்தைய நாளிலும் காவலர்களின் வங்கி கணக்கில் (Bank Account) சம்பளம் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. ஒரு காவலரின் மொத்தச் சம்பளம் என்பது வெறும் அடிப்படை ஊதியம் மட்டுமல்ல. அதனுடன் பல்வேறு கூடுதல் படிகளும் (Allowances) சேர்க்கப்படுகின்றன.
சென்னையில் பணிபுரிவதால், மற்ற மாவட்டங்களை விட சில படிகள் இவர்களுக்குக் கூடுதலாகக் கிடைக்கின்றன. அடிப்படை ஊதியம் (Basic Pay), அகவிலைப்படி (Dearness Allowance – DA), வீட்டு வாடகைப்படி (House Rent Allowance – HRA), மருத்துவப் படி மற்றும் காப்பீடு (Medical Allowance), சீருடைப் படி (Uniform Allowance), இடர் காலப் படி (Risk Allowance), பயணப்படி மற்றும் உணவுப்படி இவை அனைத்தும் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சென்னை காவலர்களின் சம்பளம் என்பது அவர்களின் கடின உழைப்பு மற்றும் 24 மணி நேர அர்ப்பணிப்புள்ள பணிக்கு அரசு வழங்கும் ஊதியமாகும். அரசு விதிகளின்படி மிகச் சரியான முறையில் கணக்கிடப்பட்டு, மாதந்தோறும் தங்கு தடையின்றி இவர்களது வங்கிக் கணக்கிற்குச் சம்பளம் சென்றடைகிறது. இது போன்ற முறையான ஊதியக் கட்டமைப்பு, காவல்துறையினர் நேர்மையுடனும் ஊக்கத்துடனும் பணியாற்றப் பெரும் துணையாக நிற்கிறது. இப்படி அரசாங்கம் சலுகை கொடுக்க சில காவலர்களால் அந்த துறைக்கே அவப்பெயர் ஏற்படுகிறது. (முழு ஆதாரம் இறுதி தீர்ப்பு புலனாய்வு மாத இதழ் பத்திரிகையில்….)
– இறுதி தீர்ப்பு செய்தி குழு
Registered News Paper in RNI/PRGI
















