தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 36,184 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 467பேர் உயிரிழந்து உள்ளனர். 24,478 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 74,112 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 36,184 பேருக்கு கொரோனா உறுதியானது.

அதில், 6 பேர், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 36,178 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,70,988 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,59,49,517 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 20,425 பேர் ஆண்கள், 15,759 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 10,54,166 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 7,16,784 ஆகவும் அதிகரித்து உள்ளது. 24,478 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,76,761 ஆக உயர்ந்தது.

467 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 168 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 299 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,598 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here