ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை கள்ளச்சந்தையில் விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.கொரோனா மருந்து ரெம்டெசிவிருக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. இதனால் மருந்து விற்பனையாளர்கள் கள்ளச்சந்தையில் வாங்கி அதிக விலைக்கு விற்கின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மருந்து மொத்த விற்பனை செய்யும் சகோதரர்கள் கணேசன் 29, சண்முகம் 27 பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றனர்.
அங்கு சோதனை நடத்தி 46 குப்பிகளை பறிமுதல் செய்தனர். தமிழகத்தின் முதல் கைதாக இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.