மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டர் கடந்த 9-ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த வழக்கை கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. (மத்திய புலனாய்வு அமைப்பு) விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here