Wednesday, May 22, 2024
Blog

சென்னை மெரினா கடற்கரையில் ரூ.7 கோடி செலவில் பாய்மர படகு!

சென்னை மெரினா கடற்கரையில் 2.75 ஏக்கர் பரப்பளவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் பாய்மர படகு விளையாட்டு தளம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பம் செய்துள்ளது.

இந்த விளையாட்டு தளம், கீழ் மற்றும் முதல் தளம் என்று இரண்டு தளங்கள் கொண்ட கட்டிடமாக கட்டப்பட உள்ளது. கீழ் தளத்தில் பயிற்சி அறை, படகு நிறுத்தும் இடம், மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது. முதல் தளத்தில் திறந்தவெளி வகுப்பறை, யோகா அறை, நூலக அறை, ஜிம், விளையாட்டு அறிவியல் பயிற்சி அறை, வரவேற்பு அறை உள்ளிட்டவைகள் அமைய உள்ளது.

CBI அதிகாரிகள் அதிரடி கைது! ஏன் தெரியுமா?!

மத்தியப் பிரதேசத்தில் நர்சிங் கல்லூரிகளுக்கு சாதகமான ஆய்வறிக்கை வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக, சிபிஐ அதிகாரி உட்பட 13 பேரை சிபிஐ கைதுசெய்திருக்கிறது. முன்னதாக, மாநிலம் தழுவிய அளவில் நர்சிங் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக ஆய்வு நடத்துமாறு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க நர்சிங் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ள, ஏழு முக்கிய குழுக்களையும், சிபிஐ அதிகாரிகள் அடங்கிய மூன்று முதல் நான்கு துணை குழுக்களையும் சிபிஐ அமைத்தது.

இத்தகைய சூழலில், ஆய்வின்போது நர்சிங் கல்லூரிகளுக்குச் சாதகமான ஆய்வறிக்கை வழங்க சிபிஐ அதிகாரி உட்பட துணைக் குழு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ-க்கு தகவல் கிடைத்திருக்கிறது. அந்த தகவல் அடிப்படையில் நேற்று இதில் நடவடிக்கை எடுத்த சிபிஐ, அந்த சிபிஐ அதிகாரி உட்பட 13 பேரைக் கைதுசெய்தது. மேலும், இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து போபால், இந்தூர், ரத்லாம் மற்றும் ஜெய்ப்பூரின் 31 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.33 கோடி ரொக்கம், 4 தங்கக் கட்டிகள், 36 டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்திருக்கிறது.

இது குறித்து பேசிய சிபிஐ செய்தித் தொடர்பாளர்:

பல்வேறு குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் கண்காணிப்பின் போது, ​​சிபிஐ இன்ஸ்பெக்டர் ராகுல் ராஜ் உட்பட ஒரு துணைக் குழுவின் அதிகாரிகள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டது. இதில், லஞ்சம் வாங்கிக்கொண்டு நர்சிங் கல்லூரிகளுக்குச் சாதகமான ஆய்வறிக்கையை வழங்குவது கவனிக்கப்பட்டது. பின்னர், சிபிஐ-யின் லஞ்ச ஒழிப்பு பிரிவு உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்கும் வகையில் சிபிஐ அதிகாரி ராகுல் ராஜ் மற்றும் பிற மூன்று சிபிஐ அதிகாரிகள் உட்பட 23 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.

இங்க நான் தான் கிங்கு படத்தின் விமர்சனம் RATING 2.9/5

கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஆனந்த் நாராயண் இயக்கத்தில், சந்தானம், ப்ரியாலயா, தம்பி ராமையா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் தான் ‘இங்க நான் தான் கிங்கு’.  

உறவுகள் இல்லாமல்  சென்னையில் தனியாக வசிக்கும் வெற்றிவேல் (சந்தானம்) திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகிறார். பெண் வீட்டாரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் சொந்த வீடு, நல்ல வேலை.. என மணமகனுக்கு உரிய தகுதியை வளர்த்துக் கொள்கிறார். இதற்காக அவர் நண்பர் ஒருவரிடம் 25 லட்ச ரூபாய் கடன் வாங்கி, வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணப்பெண்ணிடமும் மற்றும் அவரது குடும்பத்தாரிடமும் ‘கடனை அடைத்தால் திருமணம் செய்து கொள்கிறேன்’ என வெற்றிவேல் நிபந்தனை விதிக்கிறார்.

இதனால் அவரது திருமணம் தாமதமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் ரத்தினபுரி ஜமீனின் (தம்பி ராமையா)  ஒரே பெண் வாரிசான தேன்மொழி (பிரியாலயா) யை கண்டதும் காதல் கொள்கிறார். ரத்தினபுரி ஜமீன் என்றதும் தன்னுடைய நிபந்தனை எளிதாக ஏற்றுக் கொள்ளப்படும்… கடனிலிருந்து மீண்டு விடலாம் என நினைக்கும் சந்தானத்திற்கு தேன்மொழிவுடன் திருமணம் நடந்த பிறகு ரத்தினபுரி ஜமீன் பத்து கோடி ரூபாய் கடனில் மூழ்கி இருப்பது தெரிய வருகிறது. இதுக்கு நடுவுல சந்தானத்திற்கு  கடன் தந்த விவேக் பிரசன்னா, சந்தானத்தோட வீட்ல நடக்கும் விபத்துல இறந்து போய்டுறாரு. இந்த விபத்தை மறைச்சு அப்பாடான்னு மூச்சு விடுற நேரத்துல விவேக் பிரசன்னா உயிரோட வர்றாரு. பிறகு சந்தானம் என்ன செய்தார்? நடந்தது என்ன? என்பதே கதை.

சந்தானம் ஒன் லைன் பஞ்ச் காமெடி சிரிக்க வைக்கிறது. நடிகர் விவேக் பிரசன்னாவின் இரட்டை வேடம் நடிப்பு ரசிக்க வைக்கிறது. தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா, முனிஷ் காந்த், லொள்ளுசபா மாறன், மனோபாலா, சேஷூ, கூல் சுரேஷ் ஆகியோர் தேர்ந்த நடிப்பில் கவனம் பெறுகின்றனர். இமான் இசை ஓகே தான். மனோ பாலா உடல் பாவனை நகைச்சுவை சொல்லவா வேண்டும் தன்னை அறியாமலேயே சிரிக்க வைத்து விட்டார். 

வெடி குண்டு காட்சி எதற்கு அய்யா? கதையிலும், பாடலிலும், சில காமெடி காட்சியிலும் சற்று சொதப்பல் செய்து விட்டார் இயக்குனர். அடுத்த முறை கூடுதல் கவனத்துடன் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இங்க நான் தான் கிங்கு – ரசிகர்கள் கையில் நொங்கு……

  

    

நம்பர் பிளேட்டில் ‘POLICE’ ஸ்டிக்கர் : 500ரூ அபராதம்!

சென்னையில் விதிமுறைகளை மீறி போலீஸாரின் வாகனங்களில் ‘POLICE’ என ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை போக்குவரத்து போலீஸார் அகற்றியதோடு, அபராதமும் விதித்தனர்.

பலர் தங்கள் வாகனங்களில் PRESS, POLICE, DOCTOR, ADVOCATE, HIGH COURT, SECRETARIAT, ARMY என பல்வேறு ஸ்டிக்கர்களை ஒட்டுகின்றனர். போக்குவரத்து போலீஸாரின் வாகன சோதனை மற்றும் தணிக்கையின்போது அவர்களில் பலர் போலியாக ஸ்டிக்கர் ஒட்டியது தெரியவந்தது. இதையடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஒப்புதல்படி, போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கடந்த மாதம் 27-ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.

அதில், ‘தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் களை ஒட்டக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது மே 2-ம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்தார். இதற்கிடையே, ஊடகம், டாக்டர், வழக்கறிஞர் என தங்கள் துறை தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் மட்டும் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள போக்குவரத்து போலீஸார் அனுமதி அளித்தனர்.

ஆனால், நம்பர் பிளேட்டில் எக்காரணம் கொண்டும் ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என கண்டிப்பு காட்டினர். இதை மீறியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, தடையை மீறி ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்கள் போக்குவரத்து போலீஸாரால் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸாரின் வாகனங்கள் திங்கள்கிழமை மதியம் போக்குவரத்து போலீஸாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

போக்குவரத்து ஆய்வாளர் பாண்டிவேலு தலைமையிலான போலீஸார் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட போலீஸாரின் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை அடுத்தடுத்து ஆய்வு செய்தனர். இதில் இருசக்கர வாகன நம்பர் பிளேட்டுகளில் ‘போலீஸ்’ என ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை அகற்றினர். இந்த வாகனத்துக்கு சொந்தமான போலீஸாருக்கு தலா ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது.

அரசு பேருந்தில் கஞ்சா கடத்தலா? சிக்கியது யாரெல்லாம்?!

திண்டுக்கல்:

விசாகப்பட்டினத்திலிருந்து திருச்சி வழியாக திண்டுக்கல்லுக்கு அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய கஞ்சா வியாபாரிகள் 6 பேரை திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் சுப்பிரமணி, மதன்குமார், மதுபாலன்,மாதவன், தாமரைக்கண்ணன், ராஜா உட்பட 9 பேர் நேற்று விசாகப்பட்டினத்திற்கு அங்கிருக்கும் மொத்த வியாபாரிகளிடம் கிலோ கணக்கில் கஞ்சா வாங்க சென்றனர். அங்கு சென்னையை சேர்ந்த ஒருவர் இவர்களுக்கு 30 கிலோ கஞ்சா வாங்கி கொடுத்தார். அதை வாங்கிய 9 பேரும் விசாகப்பட்டினத்திலிருந்து பஸ்சில் திருச்சிக்கு கஞ்சாவை கடத்தி வந்தனர். திருச்சியிலிருந்து நேற்று மதியம் சுப்பிரமணி, மதன்குமார், மதுபாலன் ஆகியோர் முதல் கட்டமாக அரசு பஸ்சில் ஏறி திண்டுக்கல்லுக்கு வந்தனர். மீதமுள்ள 6 பேரும் வடமதுரை அய்யலுாருக்கு வேறு ஒரு அரசு பஸ்சில் ஏறி வந்தனர்.

இதையறிந்த திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் டி.எஸ்.பி.,சுந்தரபாண்டியன்,இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, எஸ்.ஐ.முத்துக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் திருச்சியிலிருந்து திண்டுக்கல்லுக்கு வரும் அரசு பஸ்,கார் உள்ளிட்ட எல்லா வாகனங்களையும் மடக்கி சோதனையில் ஈடுபட்டனர். இதில் திண்டுக்கல்லுக்கு வரும் அரசு பஸ்சிலிருந்தசுப்பிரமணி,மதன்குமார்,மதுபாலன் ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அய்யலுார் வண்டி கருப்பண்ணசாமி கோயில் அருகே பதுங்கியிருந்து கஞ்சாவை சிறிய சிறிய பொட்டலங்களாக கூட்டாளிகள் தரம் பிரித்து கொண்டிருப்பது போலீசாருக்கு தெரிந்தது. அங்கு சென்ற போலீசாரை கண்டதும் கஞ்சாவை தரம்பிரித்து கொண்டிருந்தவர்கள் தப்ப முயன்றனர். அதில் மாதவன், தாமரைக்கண்ணன், ராஜாவை போலீசார் மடக்கி பிடித்தனர். மீதமுள்ள மூவரும் தப்பினர். போலீசார் 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

MS தோனி பற்றி IPL நிர்வாகம் வெளியீடு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கௌவரப்படுத்தும் விதமாக விடியோ ஒன்றினை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி சிஎஸ்கேவை கேப்டனாக வழிநடத்துவார் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில், கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் கொடுத்துவிட்டு சாதாரண வீரராக எம்.எஸ்.தோனி தொடர் முழுவதும் விளையாடினார். கேப்டனாக இல்லாவிட்டாலும் அவரது அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தார் எம்.எஸ்.தோனி. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் சிஎஸ்கேவின் ரசிகர்கள் தங்களது நாயகனைக் காண மைதானம் நோக்கிப் படையெடுத்தனர்.

பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான முக்கியமான போட்டியில் நேற்று முன் தினம் (மே 18) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்த கடைசி வரை போராடினார்கள். இருப்பினும், அவர்களது போராட்டம் வீணானது. பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. சென்னை அணியில் பிளே ஆஃப் கனவு தகர்ந்தது.

இந்த நிலையில், மகேந்திர சிங் தோனியைக் காண போட்டி நடைபெறும் மைதானங்களை நோக்கிப் படையெடுத்த ரசிகர்கள் கூட்டத்தின் விடியோவினை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள எம்.எஸ்.தோனி 161 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 220.55 என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் கேட்ட ஊராட்சி மன்ற தலைவர்: போட்டு கொடுத்த ஒப்பந்ததாரர்!

சிதம்பரம் அருகே மழைநீா் வடிகால் அமைக்கும் பணிக்காக ஒப்பந்ததாரரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி மன்றத் தலைவரை கடலூா் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மஞ்சக்குழி கிராம ஊராட்சியில் 15-ஆவது நிதிக் குழு திட்டத்தின்படி, குடிநீா் வழங்கும் திட்டம் மற்றும் மழைநீா் வடிகால் அமைக்கும் ஒப்பந்தப் பணியில் ஒரு தனியாா் நிறுவனம் ஈடுபட்டிருந்தது.

இந்த நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான புவனகிரி வட்டம், பி.முட்லூா் நாகவள்ளி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் பி.சந்தோஷிடம் (33) மஞ்சக்குழி கிராம ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.சற்குருநாதன் மழைநீா்வடிகால் பணிகளை செய்தமைக்காக ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

இது குறித்து கடந்த 14-ஆம் தேதி கடலூா் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸில் சந்தோஷ் புகாா் அளித்தாா். ஊழல் தடுப்பு போலீஸாா் அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை ஊராட்சி மன்றத் தலைவா் சற்குருநாதனிடம், சந்தோஷ்குமாா் புதன்கிழமை கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ந.தேவநாதன் தலைமையிலான போலீஸாா் எஸ்.சற்குருநாதனைக் கைது செய்தனா்.

வீடு, அலுவலகத்தில் சோதனை:

மஞ்சக்குழியில் உள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட ஊழல் தடுப்பு போலீஸாா் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினா். மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குநா், தணிக்கை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டதுடன், வழக்கு தொடா்பான ஆவணங்களைக் கைப்பற்றினா்.

மகனின் முதல் இசை நிகழ்ச்சி: பெற்றோர் மகிழ்ச்சி!

சென்னை:

மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் 12 வயதான அபினவ் விஸ்வநாதனின் முதல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இவர் கே.கே நகரில் உள்ள PSBB மேல் நிலை பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இசை மேல் உள்ள ஆர்வத்தால் இசைக் கலைஞர் திரு UP ராஜு மற்றும் U நாகமணி அவர்களிடம்  இசை பயின்று தற்போது முதல் அரங்கேற்றத்தை கோவிலில் தொடங்கியுள்ளார். சிறுவன் அபினவ் விஸ்வநாதனுடன்  முன்னணி  தவில் வித்துவான் திரு.கே. சேகர் அவர்கள் பக்க வாத்தியம் நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் சிறுவனின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு ஊக்குவித்தனர்.  

சிறுவனின் பெற்றோர்கள் திரு. விஸ்வநாதன் மற்றும் திருமதி. காயத்ரி விஸ்வநாதன் கூறுகையில்:  

முதலில் கடவுளுக்கு நன்றி. எங்களது மகன் அபினவ் இசையில் மிகுந்த ஆர்வம் காட்டியதால் முறையான பயிற்சி பெற திரு UP ராஜு மற்றும் U நாகமணி அவர்களிடம் பயிற்சி வகுப்பிற்கு அனுப்பினோம். அவர்கள் நன்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இது எங்கள் மகனின் முதல் இசை நிகழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.  தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் ஊக்குவித்து பாராட்டி வருகின்றனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என இருவரும் கூறினர்.    

 ‘Haraa’  Movie Audio Launch!

‘Haraa’ produced by Coimbatore S P Mohan Raj and G Media Jaya Sri Vijay to be released across Tamil Nadu by Elma Pictures on June 7

Chennai:

Actor Mohan is the rarest breed of actors in Tamil Cinema, who has consistently delivered box-office hits. He owns a fan-base beyond age groups. He is now making a comeback in cinema by playing the lead in ‘Haraa’. Marking the special occasion of his birthday, the audio launch ‘Haraa’ happened in Chennai.  The event was attended by the film’s crew and eminent personalities from the industry.

On the occasion, actor Mohan was involved in philanthropic activities by giving educational aids to the underserved school kids and sewing machines to women to earn their livelihood.

‘Haraa’ produced by Coimbatore S P Mohan Raj and G Media Jaya Sri Vijay will be released across Tamil Nadu by Elma Pictures on June 7. The film has music by Rashaanth Arwin.

Here are some excerpts from the audio launch event.

Actor-Director K Bhagyaraj said…

“It’s great to see the audio launch celebration of ‘Haraa’ on the special occasion of Mohan’s birthday. It’s gladdening to see the fans gathered here for this moment. Fans have been Gods for both me and Mohan. I am here to reveal something you all don’t know about Mohan. Cinema industry functions on certain practices, but you wouldn’t have seen Mohan participating anywhere. He would always been focussed on his work. You can spot it with his physic, he is maintaining it till today. Maestro Ilaiyaraaja has been the elixir of many actors through his songs, but he has always been special when it comes to Mohan. Mohan would give an impression to everyone that he has crooned a song himself. I have seen this similarity with Sivaji Ganesan sir, a Hindi superstar, and Mohan. Director Vijay Sri G is doing different and unique pattern of movies. He featured Charu Haasan in as protagonist, Nikhil Murukan as actor, and delivered successive hits. He has now re-launched Mohan as hero through this movie. After watching the songs, I am confident that Mohan will raise the bar of success with this movie. This will be a breakthrough in the career of Mohan. I am sure that the success meet of this film will be as grand as this audio launch. My best wishes to the entire team.”
 

Director Vijay Sri G said…

“Mohan sir fans are the main reason behind making this event successful. The audiences and fans will shortly know about the film’s content. The entire cast and crew have worked hard to give their best towards this film. Mohan sir was never concerned about who are part of this project, and he gave me complete creative freedom. He would always look towards encouraging them in exploring their talents. All the songs were filmed during the challenging situations. Mohan sir will be seen in a different dimension in this film. If I am back today to normalcy after a road accident, it’s mainly because of Mohan sir’s kind gesture. He took care of me and made sure of rescheduling the shoot based on my comfortability. Mohan’s sir movies have been successful mainly because of his performance. This film will be a delightful entertainer for everyone.”


Actor Mohan said…

“I am so much privileged to have such wonderful fans, and would never get tired of thanking them. I owe them a lot. I thank them for showering their love irrespective of my presence and absence in the industry. Many people ask me why I don’t act regularly. People who know me know that I act only if I like the story. I agreed to this film only after Vijay Sri G reworked the story for 7 times. I am awe-stricken by the support and love extended by Coimbatore people. Everyone in the team worked so hard.  Vijay Sri G has made this film in such a way that it will appeal to the interests of 2K kids as well. Music director Rashaanth Arwin is the showstopper today. He has delivered tremendous songs for this film, and the one based on father-daughter bonding will be liked by all. This film has proved that a good cinema with unique content will be received very well in trade circles. It has happened with this project. Kovai Brothers, after watching the film, have appreciated the movie. The film is getting ready for release on June 7 by Kovai Brothers. This will be a treat for everyone. Thank you all.”


‘Haraa’ is produced by Coimbatore S P Mohan Raj in association with G Media Jaya Sri Vijay. The film has an ensemble star cast comprising Anumol, Kaushik of ‘Kaalangalil Aval Vasantham’ fame, ‘Powder’ fame Anitra Nair, Yogi Babu, Charu Haasan, Suresh Menon, Vanitha Vijaykumar, Mottai Rajendran, Singampuli, Deepa, Mime Gopi, Chaams , Santhosh Prabhakar and many others. Rashanth is composing music, Prahath Muniyasamy is handling cinematography and Guna is editing this movie.

சவுக்கு சங்கர் விவகாரம்: நீதிபதி போட்ட உத்தரவு!

கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜரானார். சவுக்கு சங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வாளகம் முன்பு பெண்கள் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை நீதிமன்றத்திற்குள் அழைத்து சென்றனர். தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு மே 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்தனர். சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் சவுக்கு சங்கரை மே 17 ம் தேதி வரை கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் சவுக்கு சங்கரை கைது செய்த போது அவருடன் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் காரில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்காக மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளனர். மே 22 வரை நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.