இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், லைகா புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ரித்திகா சிங் ஆகியோர் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் தான் ‘வேட்டையன்’
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்மை தவறாத காவல் அதிகாரியாக இருக்கிறார் அதியன். நீதிபதியாக சத்யதேவ் என் கவுன்டருக்கு எதிரானவர். என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கும் ரஜினிகாந்த், கொலை குற்றவாளிகளையும், கஞ்சா விற்பவர்களையும், தாதாக்களையும் பாரபட்சம் பார்க்காமல் கொலை செய்து பெயர் பெறுகிறார். இவரது நேர்மையை அறியும் அரசு பள்ளி ஆசிரியை சரண்யா தான் பணி புரியும் பள்ளியில் கஞ்சா பதுக்குவது குறித்து அவருக்கு தெரியப்படுத்துகிறார். சென்னைக்கு பணி மாறுதல் வாங்கி வரும் சரண்யா, தான் பணிபுரியும் பள்ளியிலேயே கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். பிறகு நம்ம வேட்டையன் இறங்கி என்ன செய்தார்? என்பதே கதை…
ரஜினியின் ஸ்டைல் மற்றும் மாஸ் நடிப்பை பற்றி சொல்லவா வேண்டும் சிறப்பு தான். அனிருத்தின் பின்னணி இசை எல்லாம் ஓகே. போலீஸ் என்கவுன்டர்கள் பற்றி பல கேள்விகள் கேட்கிறது படம். விசாரணை நடத்தும் போது மக்களிடையே போலீசார் பாகுபாடு பார்ப்பது பற்றியும் படத்தில் காட்டியிருக்கிறார்கள். ரஜினிக்கு அடுத்தபடியாக படம் முழுக்க தனது வசீகர நடிப்பால கவர்வது பேட்ரிக் என்ற கதாபாத்திரத்தில் வரும் பகத் பாசில். படம் முழுக்க அவர் அடிக்கும் கவுன்டர்கள் ரசிக்க வைக்கின்றன. ரஜினி வசனம் வரும் போது விசில் பறக்குது.
‘தாமதமாக வழங்கும் நீதி அநீதி’ என்பது போல அதிவேகமாக, தீர விசாரிக்கப்படாமல் கொடுக்கப்படுகிற தண்டனையும் தவறானது என்பதை உரையாடலுக்கு உட்படுத்தியிருப்பது சிறப்பு.
ஹெலிகாப்டர் காட்சியேல்லாம் ஓவரப்பா…. இரண்டாம் பாதியில் கதையின் வேகம் குறைவு…..
வேட்டையன்- அவசரகாரன்
#VettaiyanReview #VettaiyanFirstReview #VettaiyanMovie

















