Vettaiyan Audio Launch Photos
ஞானவேல் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், அபிராமி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையில் சில நாட்களுக்கு முன் வெளியான படத்தின் சிங்கிள்ஸ் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. ரூ. 160 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள வேட்டையன் படம் உலகெங்கிலும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர் ஃபகத் ஃபாசில் இந்த படத்தில் டிராக் காமெடியெல்லாம் செய்திருகிறாராம். ரஜினி, அமிதாப் பச்சன் இருவரும் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளனர். வேட்டையன் படத்தை பார்த்த ரஜினி நல்ல மாஸ் திரைப்படமாக அமைந்துள்ளது என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முழு விமர்சனம் அக்டோபர் 10-ம் தேதி நமது இறுதி தீர்ப்பு இனையதளத்தில் வெளியாகும்.