கதாநாயகி கார்த்திகாவை 6 மாதமாக வாலிபர் ஒருவர் ஒரு தலையாக காதல் வயப்படுகிறார். இதை தெரிந்து கெண்ட கார்த்திகாவின் தந்தை வாலிபரை அடித்து ஊரைவிட்டு அனுப்பிவிடுகிறார். சிறிது வருடம் கழித்து கார்த்திகா ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மீது காதல் வயப்படுகிறார். ஆட்டோ ஓட்டுனர் மர்மான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை தொடர்ந்து கார்த்திகாவை திருமணம் செய்யவரும் மேலும் இருவருக்கும் மரணம் ஏற்படுகிறது. இந்த மரணங்களை கண்டுபிடிக்க சர்வ செழியன் IPS நியமிக்கப்படுகிறார் பல கேணங்களில் விசாரணை மேற்கொள்ளும் காவல் துறை குழு அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்பவர் யார்? என்பது மீதிக்கதை….
நாயகனாக நடித்துள்ள பிரஜின், போலீஸ் அதிகாரிக்குரிய கம்பீரத்தையும், காதல் காட்சிகளில் தேவையான மென்மையையும் சமநிலையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்துள்ள இவானா வருண், உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரத்தை இயல்பாக சுமந்து சென்று கவனம் ஈர்க்கிறார். அனுபமா குமார், எம்.கே. சாம்பசிவம், செந்தி குமாரி, ஆதிரன், பத்மன், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்து, படத்தின் நம்பகத்தன்மையை உயர்த்தியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன், கிரைம் த்ரில்லருக்குத் தேவையான பதற்றமான காட்சிகளை திறமையாக பதிவு செய்திருக்கிறார். அதே நேரத்தில் காதல் மற்றும் பாடல் காட்சிகளில் வண்ணமயமான காட்சியமைப்பையும் வழங்கியுள்ளார். இசையமைப்பாளர் ஹரி எஸ்.ஆர். பின்னணி இசை மூலம் சஸ்பென்ஸ் உணர்வை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். பாடல்கள் கதைக்கு இடையூறாக இல்லாமல், தேவையான இடங்களில் உணர்ச்சிகளை வலுப்படுத்துகின்றன.
இயக்குநர் சந்தோஷ் ராவணன், வழக்கமாக பலமுறை சொல்லப்பட்ட தொடர் கொலைக் கதைக்கு புதிய திரைக்கதை அணுகுமுறையை வழங்க முயற்சித்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பை தக்கவைத்து, பார்வையாளர்களை பல்வேறு கதாபாத்திரங்கள் மீது சந்தேகப்பட வைக்கும் விதமாக காட்சிகளை அமைத்திருப்பது அவரது முக்கிய வெற்றி. குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் திருப்பம், படம் முழுவதும் உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்புக்கு நல்ல நிறைவு அளிக்கிறது.
மைனஸ்: கதையில் இன்னும் கூடுதல் கவனம் தேவை.
மொத்தத்கில் இந்த ‘அந்தரன்’ மர்மம்.

















