ரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையத்தில் சலூன் கடை நடத்தி வருபவர் முருகேசன், இவரது மூத்த மகள் ரோகினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ரோகினி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார்.

தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 21-ம் தேதி இரவு, 4 மாதங்களாக ஒரு இளைஞருடன் நட்பு ரீதியாக பேசி வந்ததாகவும், தற்போது அந்த இளைஞர் தன்னை பாலியல் ரீதியாக மிரட்டுவதாகவும் பெற்றோரிடம் தெரிவித்தார். அந்த இளைஞர் மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விஷயம் தெரிந்ததும், அச்சமடைந்த ரோகினி குடும்பத்தினர், மாணவியை பாட்டி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். அங்கு சென்ற மாணவி, மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், மாணவியின் புகைப்படங்களை வைத்து விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, அந்தியூர் காவல் நிலையத்தில் குடுப்பதினர் புகார் அளித்திருந்தும் இதுவரை குற்றச்சாட்டில் தொடர்புடைய இளைஞர் கைது செய்யப்படவில்லை என மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பிரேத பரிசோதனை முடிந்திருந்தாலும் அதன் அறிக்கை இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுத்து, மாணவிக்கு நீதி கிடைக்க மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் மொத்தம் 285 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பெற்றோர் கதறி அழுத காட்சிகள் அங்கிருந்தவர்களை உருக்கமடைய செய்தது. மேலும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்து மீண்டும் கவலை எழுந்துள்ளது. இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் நடத்திய மக்கள் குறைதீர் முகாமில், அந்தியூர் தவிட்டுப்பாளையம் அம்பேத்கர் வீதியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here