இந்திய கப்பல் படையில் அதிகாரியாக இருக்கும் நாயகன் ரங்கா, தனது அப்பா தொடங்கிய உணவகத்தை தனது மாமாவுடன் இணைந்து நடத்துகிறார். அவரது மாமா செய்த ஒரு தவறால் அந்த உணவகம் அவர்களிடம் இருந்து கைமாறி வில்லன் நித்தின் மேத்தாவிடம் போகிறது. அவன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அந்த உணவகத்தில் வைக்கிறான். இந்த நிலையில், இப்பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடிக்க திட்டமிடுகிறது. கொள்ளையடிக்க முயற்சிக்கும் கும்பலின் மூளையாக செயல்படும் நபர் யார்? என்பது தான் ‘தென் சென்னை’ படத்தின் கதை…
இயக்குநர் ரங்கா தேர்ந்து கொண்டிருக்கும் பூர்வீக இடத்தை மீட்பது என்கிற மைய பிரச்சினையை உணர்வு குன்றாமல் கையாண்டிருக்கிறார். கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்தது ஈர்ப்பான அம்சம். நிதின் மேத்தா வின் தோற்றம், உயரம், அலட்டல் இல்லாத நடிப்பு ஆகியவற்றால் ஈர்த்துக்கொள்கிறார். சென்னை மாநகரை அழகாகவும் மர்மமாகவும் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சரத்குமார். முதல் பாதியில் கதையின் வேகம் குறைவு…. இரண்டாம் பாதி பறக்கிறது….
இந்த தென் சென்னை- குடும்ப திரில்லர் கலவை
ராஜ் குமார்- சினிமா நிருபர்

















