கஞ்சா கடத்தி வந்த வட மாநில தொழிலாளர்கள் 5 பேரை கிணத்துக்கடவு போலீஸார் கைது செய்தனர். கிணத்துக்கடவு அருகே வட மாநில கூலி தொழிலாளர்களிடம் கஞ்சா நடமாட்டம் உள்ளதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி உத்தரவிட்டார்.
பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் மற்றும் போலீசார் கிணத்துக்கடவு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கோவை- பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் ஏலூர் பிரிவு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திலிருந்து சில நபர்கள் கையில் பையுடன் இறங்கினார்கள்.
போலீசார் கண்காணித்து அந்த நபர்கள் கையில் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் 15 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 5 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஹபிபுல்லா (27), முகமதுமோடின் (26) முகமது வாசிம் (47), முகமது காதீர் (40) முகமது மஜிபுல் (23) என்பது தெரிய வந்தது. கஞ்சாவை கோவை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது.
-எமது கோவை நிருபர் P.பிரேமா

















