சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்து வந்த 4வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் முடிவுற்றது. இதில் இந்தியா தங்க பதக்கங்களை குவித்து முதலிடம் பிடித்துள்ளது.
இந்தத் தொடரில் இந்தியா உட்பட 7 நாடுகளைச் சேர்ந்த 210 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தத் தொடரில் மொத்தம் 28 வகையான விளையாட்டு போட்டிகள் நடந்தன. 1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 29 ஆண்டுகள் கழித்து, சர்வதேச தடகள போட்டி தற்போது சென்னையில் நடைபெற்றது.
இந்தத் தொடரில் இந்தியாவில் இருந்து மட்டும் மொத்தம், 62 பேர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 9 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.