ஐபிஎல் 3-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற மும்பை இந்தியன்ஸ் அணி 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி தொடக்கவீரரும் முன்னாள் கேப்டனுமான ரோகித் சர்மா டக்-அவுட் ஆக, அதன்பின் சென்னை வீரர்களின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி வீரர்கள் திணறினர்.அந்த அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 31 ரன்கள், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 ரன்களும் திரட்டினர்.
எனினும், கடைசியில் களமிறங்கி அதிரடி காட்டிய சென்னை அணியின் முன்னாள் வீரரும் இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள ஆல் ரவுண்டர் தீபக் சாஹர் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 15 பந்துகளில் 28 ரன்களை திரட்ட, மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது.
டாஸ் வென்று முதலில் பந்துவீசிய சென்னை அணியில் அதிகபட்சமாக நூர் அகமது 4 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 3, நாதன் எல்லீஸ் 1, ரவிச்சந்திரன் அஸ்வின் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். சென்னை அணியில்(1.4 ஓவர் நிலவரப்படி) தொடக்க வீரராகக் களமிறங்கியுள்ள ரச்சின் ரவீந்திரா 8 ரன்களுடன் களத்தில் உள்ளார். ராகுல் திரிபாதி 2 ரன்களில் தீபக் சாஹர் பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.