இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ரிப்பீட் ஷூ’. இந்த படத்தில் யோகி பாபு, திலீபன், ரெடிங் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், விஜய் டிவி பாலா, ப்ரியா போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைத்து இருக்கிறார். டைம் டிராவல் கான்செப்டில் இந்த படம் உருவாகிறது.
படத்தில் நாயகன் திலீபன் அவர்கள் ஒரு டைம் ட்ராவல் மெஷினை பொருத்திய ஷூ ஒன்றை தயாரிக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக போலீசுக்கும் இவருக்கும் இடையே ப்ரச்சனை ஏற்படுகிறது. அதில் துப்பாக்கி கொண்டு நாயகன் திலீபன் கழுத்தில் பாய்கிறது. இதனால் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அது மட்டும் இல்லாமல் தாம் கண்டு பிடித்த டைம் டிராவல் சூவை திலீபன் ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு செல்கிறார்.
திலீபன் மறைத்து வைத்திருந்த ஷூ, செருப்பு தைக்கும் தொழிலாளி ஆன அந்தோணி தாசனின் மகளாக வரும் பிரியாவிடம் சிக்குகிறது. அவரிடம் இருந்து யோகி பாபுவின் கைக்கு அந்த ஷூ செல்கிறது. ஷூ வந்த நேரம் யோகி பாபு உடைய வாழ்க்கையே மாறுகிறது . யோகி பாபு அடுத்த கட்டத்திற்கு செல்கிறார் என்றே சொல்லலாம். இதற்கிடையில் 15 வயதிற்குட்பட்ட சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி வருகிறது ஒரு கும்பல்.
அந்த கும்பலிடம் குடிகாரரான அந்தோணி தாசன் தன்னுடைய மகள் பிரியாவையும் விற்று விடுகிறார். இந்த நிலையில் பிரியாவின் வாழ்க்கை என்னானது? கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டார்களா? இறுதியில் இந்த ஷூவை திலீப் கைப்பற்றினாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.
இந்த படத்தில் ஷூ வில் டைம் ட்ராவல் மெஷினை வைத்து வித்தியாசமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். டெக்னிக்கலாக இந்த படத்தை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் கல்யாண். படத்தில் யோகி பாபு, ரெடீன், பாலா காட்சிகள் எல்லாம் அருமையாக வந்திருக்கிறது. பெண் குழந்தைகளை கொடுமைப்படுத்தும் காட்சிகளும், பாலியல் கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை கொடுக்கும் படமாக இந்த படத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர். ஆனால் காட்சியில் அந்த சிறு பெண் குழந்தையை பாலியல் அறைக்கு அனுப்புவது இயக்குனர் மீது கோபத்தை ஏற்படுத்துகிறது……..
மொத்தத்தில் இந்த ரிப்பீட் ‘ஷூ’ வை ஒரு முறை அணியலாம்…….