மதுரை மாவட்டம் முத்துப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்துள்ளார். இவருக்கும் மதுரை ஐயர் பங்களா பகுதியை சேர்ந்த சந்துருக்கும் சிறுமிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
சிறுமிக்கு திருமண ஆசைக் காட்டி பலமுறை தனியே அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் சந்துரு. அத்தோடு அதனை வீடியோவும் எடுத்து வைத்துள்ளார். தான் செய்வதை செய்யவில்லை என்றால், அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு விடுவேன் என அந்த சிறுமியை மிரட்டி அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் வாங்கியுள்ளார் சந்துரு.
பயத்திலேயே அந்த சிறுமியும் 118 கிராம் தங்க நகைகள், ரூ.1லட்சம் வரை சந்துருவுக்கு கொடுத்து வந்துள்ளார். வழக்கம் போல சந்துரு பணம் கேட்டு மிரட்ட சிறுமி வீட்டிலிருந்த 50,000 பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்றுள்ளார்.
பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ந்து போன சிறுமியின் தந்தை, சிறுமியை மிரட்டியதும் பயத்தில் சிறுமி சந்துரு குறித்தும் அவர் மிரட்டி பணம், நகை பறித்தது குறித்தும் கூறியிருக்கிறார். இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, மிரட்டி பணம், நகைகளை பறித்த சந்துருவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.