சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வார விடுமுறை மற்றும் பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
குடும்பத்துடன் பயணம் மேற்கொள்வதற்கு, பயணியர் ஏராளமானோர் நேற்று, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு படையெடுத்தனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனைய அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறையையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, வழக்கமான பேருந்துகளுடன், கூடுதலாக 350 சிறப்பு பேருந்துகள் நேற்று, இயக்கப்பட்டன. பயணியர் வருகையை பொறுத்து அதிகரிக்கப்படும். மேலும், விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணியருக்கும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேருந்து முனையத்திற்கு வரும் பயணியருக்கு, 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க, கிளாம்பாக்கம் போலீசாருக்கு, கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ராஜிவ் பிரின்ஸ் ஆரோன் உத்தரவிட்டுள்ளார்.