டெல்லி:

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய போதுமான தரவுகள் இல்லை என்றும், நீட் தேர்வில் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் மீறும் வகையில் முறைகேடு நடைபெறவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே, கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளது.

20 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு இந்த தீர்ப்பை வழங்குவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஐஐடி-சென்னை வழங்கிய நீட் தேர்வு குறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்திருக்கிறது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஹசாரிபாக், பாட்னாவில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் நடந்த முறைகேடுகள் மூலம் 155 பேர் பயனடைந்துள்ளனர். இந்தக் காரணத்துக்காக மறுதேர்வு நடத்தப்பட்டால் அது சுமார் 23 லட்சம் மாணவர்களை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here