குட்டி பையனாக இருக்கும் முபாசா ஒரு வெள்ளத்தால் தன் குடும்பத்தை பிரிந்து வேறு இடத்திற்கு செல்கிறான். அங்கு முபாசாவை அந்த ஊர் சிங்கராஜா ஏற்க மறுத்தாலும், அவருடைய மனைவி முபாசாவை தன் சொந்த மகன் போல் வளர்க்கிறார். அந்த சமயத்தில் வெள்ளை சிங்கங்களின் தலைவன் கியார்க் மூலம் பெரும் ஆபாத்து வர, முபாசாவுடன் தன் சொந்த மகன் டாக்காவை ராஜா அனுப்பி வைக்கின்றார். முபாசாவும் போகும் வழியில் சில நண்பர்களை உருவாக்கி அவர்களுடன் மிலல் என்ற இடத்தை நோக்கி செல்ல, பின்னே வெள்ளை சிங்கங்களும் துரத்தி வருகிறது. பிறகு என்ன ஆனது என்பதே கதை….

முபாசா எப்படி தன் மிலல் இடத்தை அடைந்து ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கினான் என்பதை அத்தனை தத்ரூபமாக காட்டியுள்ளனர். ஆரம்பத்தில் யானை மோதி அணை உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லும் முபாசா கடைசி வரை தண்ணீருக்கு பயந்து கிளைமேக்ஸில் அதே தண்ணீரில் மீண்டு வரும் காட்சி சிறப்பு. அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், நாசர், சிங்கம் புலி, ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ் குரல்கள் மேலும் காட்சிகளை ஈர்க்க வைக்கிறது. VFX காட்சிகள் மற்றும் பின்னணி இசை அருமை.

பாடல்களை குறைத்து, குழந்தைகள் விரும்பும் சாகச காட்சிகளை மேலும் அதிகபடுத்தியிருக்கலாம்…..

இந்த ‘முஃபாசா: தி லயன் கிங்’- குழந்தைகளுக்கு குதுகலம்

ராஜ்குமார்- சினிமா நிருபர்  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here