குடவாசல் நகர் பகுதியில் அமைந்துள்ளது கணேஷ் பேக்கரி இந்த பேக்கரியில் நேற்று மாலை பால், கிட்டு செந்தில் ஆகிய இருவரும் மாமூல் வேண்டுமென கடையில் பணம் கேட்டுள்ளார்கள். அப்பொழுது கடையில் உள்ள ஊழியர் 20 ரூபாய் கொடுத்துள்ளார். ஏன் குறைவாக கொடுக்கிறீர்கள் என்று கேட்டு அங்கு உள்ள பொருட்களை தள்ளிவிட்டு ஆபாச வார்த்தைகளால் கடுமையாக இருவரும் கடை ஊழியர்களையும் முதலாளியையும் திட்டி உள்ளார்கள். இவை அனைத்தும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது
உடனடியாக குடவாசல் காவல்துறையினர் தகவலறிந்து அங்கு வந்தார்கள் மேலும் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பற்றி அதன் அடிப்படையில் பால் கிட்டு மற்றும் செந்தில் ஆகிய இரண்டு நபர்களின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். குற்றவாளிகளை கைது செய்யும் வரை குடவாசல் நகர் பகுதியில் கடையடைப்பு தொடரும் என குடவாசல் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் தொடர்ந்து கடையடைப்பு நடைபெற்று வருகிறது கடையடைப்பு காரணமாக குடவாசல் நகர் பகுதியில் வாழக்கூடிய மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.