ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பாகப் பல்வேறு புகார்கள் பெறப்பட் டன. பைக்குகள் திருடுபோன இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் அலங்கா நல்லூர் பகுதியைச் சேர்ந்த சரத் பாபு (40), அணைக்கட்டு தாலுகா அல்லிவரம் பகுதியைச் சேர்ந்த விமல்குமார் (31) ஆகிய இருவரை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை வேலூர் மாவட்டம் கணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர். இதற்கு கணியம்பாடி மோட்டுகுளம் பகுதியைச் சேர்ந்த வரும், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தமிழ்நாடு பட்டாலியன் சிறப்புப் படையில் காவல ராகப் பணிபுரிந்து வருபவருமான மணிகண்டன் (32) என்பவர் உதவி செய்ததும் தெரிய வந்தது. திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை வேலூர் மற் றும் கணியம்பாடி பகுதிக்குக் கொண்டு வந்து மிகக் குறைந்த விலைக்கு இவர்கள் விற்றுள்ளனர்.

இதையடுத்து, கணியம்பாடியில் இருந்த காவலர் மணிகண்டனை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து, அங்கு குறைந்த விலைக்கு விற்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை போலீஸார் மீட்டனர். இந்த மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் பலவற்றுக்கு வழக்குப் பதிவு செய்யப்படாததால், அதனை உரியவர்களிடம் ஒப்படைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் சிலர் தெரிவிக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here