ளநிலை மருத்​து​வப் படிப்​பு​களில் மாணவர் சேர்க்​கைக்​கான ‘நீட்’ தேர்வு நாடு முழு​வதும் சுமார் 5,500 மையங்​களில் இன்று நடை​பெறுகிறது. மருத்​து​வப் படிப்​பு​களில் சுமார் 2 லட்​சம் இடங்​கள் உள்ள நிலை​யில், 22.80 லட்​சம் மாணவ, மாணவி​கள், தேர்வு எழுதுகின்​றனர். நீட் தேர்வு முடிவு​களை அடுத்த மாதம் வெளி​யிட தேசியத் தேர்​வு​கள் முகமை திட்​ட​மிட்​டுள்​ளது.

நாடு முழு​வதும் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​கள், சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஓமியோபதி படிப்​பு​கள், ராணுவக் கல்​லூரி​களில் பிஎஸ்சி நர்​சிங் படிப்​பு​கள் மற்​றும் கால்​நடை மருத்​து​வப் படிப்​பின் அகில இந்​திய ஒதுக்​கீட்டு இடங்​கள் ஆகியவை தேசிய தகுதி மற்​றும் நுழைவுத் தேர்​வில் (NEET – ‘நீட்’) தகுதி பெறு​பவர்​களைக் கொண்டு நிரப்​பப்​படு​கின்​றன. இந்த தேர்வை தேசியத் தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்​துகிறது. அதன்​படி, 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் இன்று பிற்​பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடை​பெறுகிறது. 

தமிழகத்​தில் சென்​னை, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், திருச்​சி, மதுரை, கோவை என 30 நகரங்​கள் உட்பட நாடு முழு​வதும் 552 நகரங்​கள் மற்​றும் துபாய், அபு​தாபி, தோகா, மஸ்​கட், ரியாத், சிங்​கப்​பூர் என வெளி​நாடு​களில் 14 இடங்​களில் தேர்வு நடை​பெறும். அந்த வகை​யில், சுமார் 5,500 மையங்​களில் தேர்வு நடை​பெறுகிறது.

சுமார் 2 லட்​சம் இடங்​கள் உள்ள நிலை​யில், 9.47 லட்சம் மாணவர்​கள், 13.33 லட்​சம் மாணவி​கள் என மொத்​தம் 22.80 லட்​சம் பேர் தேர்​வுக்கு விண்​ணப்​பித்​துள்​ளனர். தமிழ், ஆங்​கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடை​பெறும். இயற்​பியல், வேதி​யியல், உயி​ரியல் (தாவர​வியல், விலங்​கியல்) பாடங்​களில் இருந்து தலா 50 கேள்வி​கள் என மொத்​தம் 200 கேள்வி​கள் கேட்​கப்​படும். அதில் 180 கேள்வி​களுக்கு பதில் அளிக்க வேண்​டும்.

ஒரு கேள்விக்கு 4 மதிப்​பெண் என மொத்​தம் 720 மதிப்​பெண்​கள் வழங்​கப்​படு​கிறது. ஒரு தவறான பதி​லுக்கு ஒரு மதிப்​பெண் (நெகட்​டிவ்) குறைக்​கப்​படும். நீட் தேர்வு முடிவு​களை அடுத்த மாதம் வெளி​யிட என்​டிஏ திட்​ட​மிட்​டுள்​ளது.

கடந்த 2024-ம் ஆண்டு வட மாநிலங்​களில் மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​கள் சிலர் ஆள்​மாறாட்​டத்​தில் ஈடு​பட்​டு, உண்​மை​யான தேர்​வர்​களுக்கு பதிலாக நீட் தேர்வு எழு​தி​ய​தாக புகார் எழுந்​தது. இதுதொடர்​பாக பிஹார், ராஜஸ்​தான், ஜார்க்​கண்​டில் 7 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், ஆள்​மாறாட்​டத்தை தடுக்​கும் வித​மாக, ‘நீட் தேர்வு நடை​பெறும் மே 3-ம் தேதி மற்​றும் அதற்கு முந்​தைய நாளான 2-ம் தேதி ஆகிய 2 நாட்​களும் எம்​பிபிஎஸ் மாணவர்​களுக்கு விடு​முறை வழங்க வேண்​டாம்.

அத்​தி​யா​வசி​யக் காரணங்​கள் இருந்​தால் மட்​டும் விலக்கு அளிக்​கலாம்’ என்று நாடு முழு​வதும் உள்ள மருத்​து​வக் கல்​லூரி​களின் நிர்​வாகங்​களுக்கு தேசிய மருத்​துவ ஆணை​யம் கடந்த வாரம் சுற்​றறிக்கை அனுப்​பியது. அதன்​படி, மருத்​துவ மாணவர்​களுக்கு நேற்று விடு​முறை வழங்​கப்​பட​வில்​லை. இன்​றும்​ அனைத்​து மாணவர்​களும்​ கல்​லூரிக்​கு வரு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது குறிப்பிடத்தக்கது.

தேர்வு கட்​டுப்​பாடு​கள்: தேர்​வர்​கள் காலை 11 மணி முதல் மதி​யம் 1.30 மணி வரை தேர்வு மையத்​துக்​குள் செல்ல அனு​ம​திக்​கப்​படு​வார்​கள். 1.30 மணிக்​குப் பிறகு வந்​தால் அனு​மதி இல்லை என்று தேசி​யத் தேர்வு முகமை தெரி​வித்​துள்​ளது.

நீட் தேர்​வுக்​கான வழி​காட்டு நெறி​முறை​களை தேசியத் தேர்வு முகமை (என்​டிஏ) வெளி​யிட்​டுள்​ளது. அதன் விவரம்: தேர்வு மையத்துக்குள் தேர்​வர்​கள் தண்​ணீர் பாட்​டில் எடுத்​துச் செல்​லலாம். ஆனால், அவை வெளிப்​படைத் தன்​மை​யுடன் அதாவது ஒளிபு​கும் வித​மாக இருக்க வேண்​டும். மத நம்​பிக்கை சார்ந்த அடை​யாளங்​கள், பொருட்​களை அணிந்து வரலாம்.

அதே​போல, சாதாரண ஆடைகளை அணிவதே சரி​யானது. தேவைப்​பட்​டால் முழுக்கை ஆடைகள் அல்​லது கம்​பளி ஆடை அணிய அனு​ம​திக்​கப்​படு​வார்​கள். எனினும், முறை​யான சோதனைக்கு ஒத்​துழைக்​கும் வித​மாக, குறிப்​பிட்ட நேரத்​துக்கு முன்​ன​தாகவே தேர்வு மையத்​துக்கு தேர்வர்கள் வந்​து​விட​வேண்​டும்.

தேர்வர்கள் உயரம் குறைந்த (லோ ஹீல்​ஸ்), சாதாரண காலணி​களை அணி​ய​லாம். உயர​மான காலணி​கள், கனமான அணி​கலன்​கள் அணிவதை தவிர்க்க வேண்​டும். தேர்​வர்​கள் காலை 11 மணி முதல் மதி​யம் 1.30 மணி வரை தேர்வு மையத்​துக்​குள் செல்ல அனு​ம​திக்​கப்​படு​வார்​கள். மதியம் 1.30 மணிக்​குப் பிறகு வந்​தால் அனு​மதி இல்​லை. தேர்வு மையத்​துக்கு முன்​கூட்​டியே வந்​தடை​யும் வகை​யில் பயணத்தை திட்​ட​மிட வேண்​டும் என்​பது உட்பட பல்​வேறு வழி​காட்​டு​தல்​களை என்​டிஏ வெளி​யிட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here