இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் தான் ‘குட் பேட் அக்லி’
விமர்சனம்:
முன்னாள் கேங்ஸ்டர் ரெட் டிராகன் அஜித்குமார் தன் மனைவி ரம்யா கேட்டுக் கொண்டதாலும், மகனுக்கு ஒரு நல்ல தந்தையாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தாதலும், தன் தவறுகளை ஒப்புக் கொண்டு அரசாங்கத்தில் சரணடைந்து மும்பையில் 18 வருடங்கள் சிறை வாசம் இருக்கிறார் . அப்பாவின் குற்ற பிம்பத்தை மறைத்து அவர் பிஸ்னசில் பிசியாக இருக்கிறார் என சொல்லி ஸ்பெய்னில் தன் மகன் விஹானை வளர்க்கிறார். பல வருடங்களுக்கு பின் விஹானை பார்க்க சிறையில் இருந்து விடுதலையாகி ஸ்பெய்னுக்கு அஜித்குமார் வரும் போது, போதைப் பொருள் வழக்கு ஒன்றில் விஹான் கைதாகிறார். மகனுக்காக கைவிட்ட வன்முறையை, அவனை காப்பாறுவதற்காக மீண்டும் கையில் எடுக்கிறார் அஜித்குமார். மகனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்தது யார்? அஜித்குமார் காப்பாற்றினாரா? என்பதே மீதி கதை….
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை அஜித் ரசிகர்கள் நீண்ட காலம் மறக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு ரசிகனாகவும் இயக்குநராகவும் குட் பேட் அக்லியை முழுக்க அஜித்தின் படமாகவே உருவாக்கியிருக்கிறார் ஆதிக். நடிகராக அஜித், ஒன் மேன் ஷோவாக படத்தை தாங்க முயற்சித்திருக்கிறார். டான்ஸ், ஃபைட், மாஸ் என எந்தக் குறையும் வைக்கவில்லை. த்ரிஷாவுக்கு பெரிய ரோல் இல்லை என்றாலும், வரும் காட்சிகளுக்கு தேவையான சீரியஸ் உணர்வை கொடுக்கிறார்.
வில்லன் ரோலில் வரும் அர்ஜுன் தாஸ் மிரட்டுகிறார். பிரபு, பிரசன்னா, சுனில், உஷா உதுப், ப்ரியா பிரகாஷ் வாரியார், சிம்ரன் எனப் பலர் வருகிறார்கள். கெஸ்ட் ரோலில் வரும் சிம்ரனுக்கு கூட ஒரு நல்ல ரோல் இருக்கிறது. ஆனால் முழுமையாக வரும் கதாப்பாத்திரங்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. படத்தில் அஜித் நாயகனாக இருந்தாலும் அந்தப் பிம்பத்தை இறுதிவரை குறையாமல் பார்த்துக் கொண்டது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்தான். ஜிவியின் பின்னணி இசை பிளேஷ் பேக் காட்சிகளுக்கு பெரிய பலத்தை அளிக்கின்றன.
கதை புதிதாக இல்லை… படத்தில் சுவாரஸ்யம் குறைவு…. கெஸ்ட் ரோலில் கூடுதல் கவனம் தேவை….
மொத்தத்தில் இந்த ‘குட் பேட் அக்லி’ சீண்டினால் வெடிக்கும்….
RAJKUMAR- CINEMA REPORTER

















