கோட் படத்தின் பட்ஜெட் மற்றும் வணிகம் குறித்து தயாரிப்பாளர் பேசியுள்ளார். விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய் – இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற ஆக்சன், டீஏஜிங் காட்சிகள் படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.

படத்தின் புரமோஷனுக்காக இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகியோர் நேர்காணல்களை அளித்து வருகின்றனர். அப்படி நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர், “பிகில் திரைப்படம் ரூ. 180 கோடியில் உருவானது. படம் வெளியாகி 5 ஆண்டுகளே ஆனாலும் நடிகர் விஜய்யின் மார்க்கெட் பிரம்மாண்டாக வளர்ந்து விட்டது.

கோட் திரைப்படம் கிட்டத்தட்ட ரூ. 400 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், பாதி நடிகர் விஜய்யின் சம்பளம். கோட் மிகப்பெரிய படமாக உருவாகியுள்ளது. டிஏஜிங் தொழில்நுட்பம் இருந்ததால் பட்ஜெட் அதிகமாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here