தயாரிப்பாளர் மற்றும் நடிகர் JSK சதீஷ் இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான், ஜேஎஸ்கே சதீஸ், சிங்கம்புலி, எஸ்.கே.ஜீவா, சுரேஷ் சக்ரவர்த்தி, அனு விக்னேஷ், குழந்தை மனோஜ் ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘பயர்’. தற்போது சிறையில் இருக்கும் காசியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இயக்கியுள்ளார் JSK சதீஷ்.
விமர்சனம்:
நாகர்கோவிலில் காசி என்ற இளைஞர் பிசியோதெரபி மருத்துவர். இவர் பல இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறித்து வருகிறார். திடீரென்று காசி காணாமல் போகிறார். உடனே அவரது பெற்றோர்கள் காவல்துறையில் புகார் கொடுக்கிறார்கள். சரவணன் என்ற ஆய்வாளர் குழு விசாரணையை தொடங்குகிறது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் தெரிய வருகிறது. இதற்கிடையில் அமைச்சர் ஒருவர் அந்த விசாரணை வளையத்தில் சிக்குகிறார். பிறகு என்ன நடந்தது? காசியை காவல்துறை ஆய்வாளர் கண்டுபிடித்தாரா? இல்லையா என்பதே கதை….
மருத்துவர் கதாபாத்திரத்தில் பாலாஜி முருகதாஸ் ஏமாற்றும் நடிப்பு ஓகே. படத்தில் சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான், சிங்கம் புலி, சுரேஷ் சக்கரவர்த்தி என அனைவரும் தனக்கு கொடுத்த வேலையை செய்துள்ளனர். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் ஒரு போலீஸ் அதிகாரியாக தனது விசாரணையை தெளிவாக தொடங்கியிருக்கிறார். பெண்கள் பிசியோதெரபி மருத்துவமனைக்கு செல்லும் போது மருத்துவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று படம் சொல்லுகிறது. ஆனால் கிளைமேக்ஸ் சட்டத்தை மீறி விட்டது.
முதல் பாதி விறுவிறுப்பு…. இரண்டாம் பாதி பிசுபிசுப்பு….
மொத்தத்தில் இந்த ‘பயர்’ பத்திட்டு அணையும்……