ஜி. சங்கர் இயக்கத்தில் சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்து, பிரேம்ஜி அமரன், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், மீரா கிருஷ்ணன், ராதாரவி, வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘தினசரி’
விமர்சனம்:
நாயகன் ஸ்ரீகாந்த் நன்றாக படித்து ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார். அவர் தன்னைவிட அதிகம் சம்பளம் வாங்கும் பெண்ணையே திருமணம் செய்ய நிபந்தனைகள் போடுகிறார். அவர் நிபந்தனையை ஏற்க முடியாமல் அவரது திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. தன் குடும்பமே தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்திருக்கிறது என்று தெரிந்த அவர் மனமுடைந்து போகிறார். ஆடம்பர வாழ்க்கைக்கும் பகட்டு கௌரவத்திற்கும் ஆசைப்பட்டு தன் தாய் தந்தை சொல்லையும் மீறி கடன் வாங்கி தனது பேராசையால் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். பிறகு வாங்கிய கடனை திருப்பி செலுத்துகிறாரா? இல்லையா? என்பதே கதை….
பண பேராசையால் எப்படி எல்லாம் மக்கள் துன்பப்படுகிறார்கள் என்பதைப் பற்றி கதை கூறுகிறது. ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மனம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது படம். அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணன் ஒற்றை ஆளாக வீட்டில் நடக்கும் காட்சிகளைத் தூக்கிச் சுமக்கிறார். இளையராஜாவின் இசை ஓகே. படத்தில் நடித்த ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்து, பிரேம்ஜி அமரன், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், மீரா கிருஷ்ணன், ராதாரவி, வினோதினி என அனைவரும் தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். கதை தெளிவாக இல்லை…. சண்டைக்காட்சிகளில் கூடுதல் கவனம் தேவை….
மொத்தத்தில் இந்த ‘தினசரி’ பேராசை….
ராஜ்குமார் (சினிமா நிருபர்)