ப்துல் பாசித் சையத் தயாரிப்பில் அஷ்ரப் எழுதி இயக்கி நாயகனாக நடிக்க, ஜனனி சாமிநாதன், கருணாகரன், உறியடி சிவா, ஆடுகளம் நரேன், தேவி மகேஷ் உடன் நடிப்பில் வந்திருக்கும் படம் தான் ‘போட்டோகிராபர்’.

கரு: தனது தாயின் கனவை தன் மூலமாக நிறைவேற்றுவதே ‘போட்டோகிராப்’

விமர்சனம்:

மகன் வீராவுக்கு அப்பா ஆடுகளம் நரேன் சொல்கிறபடி அவரது பிசினைஸ் கவனித்துக் கொள்ள விருப்பம் இல்லை. அவனது காதலி ஜனனி மற்றும் அவளது அப்பா, ஆகியோர் சொல்லியும் அவனால் மாறமுடியவில்லை. அவன் மனதுக்குள் ஒரு முள் இருக்கிறது.
 
அந்த முள்ளின் கிழிசலில் இருந்து தப்பிக்க , வாழ்வில் வித்தியாசமாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணும்  வீராவுக்கு, கொடைக்கானலில் உள்ள மதிகெட்டான் சோலையில் இருப்பதாக சொல்லப்படும் தங்க மரத்தை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசை. அதற்கு  நண்பன் கபிலன் மட்டும் அவனுக்கு உதவுகிறான். மதிகெட்டான் சோலைக்குள் போன யாரும் உயிரோடு வந்தது இல்லை என்பது வரலாறு. ‘அங்கே பேய்கள் இருக்கிறது .  வேறு பல கொடிய சக்திகள் இருக்கின்றன’ என்று எல்லாம் சொல்லப்படுகிறது. 
 
நண்பனால் வர முடியாத நிலையில் தான் மட்டும் கொடைக்கானல் போகிறான் வீரா. நண்பன்  ஏற்பாடு செய்து தந்த கைடும் கடைசி நேரத்தில் குழப்ப,  தனி ஒருவனாக மதிகெட்டான் சோலைக்குள் நுழைகிறான் வீரா. அங்கே அவனுக்கு என்ன நடந்தது? என்பதே கதை….
 
வீரா என்ற கதாபாத்திரத்தின் மூலம் முழுப் படத்தையும் தன் தோள்களில் சுமந்து நடித்திருக்கும் அவர், முதல் படத்திலேயே பல்வேறு உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தி நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். ஆரம்பத்தில் அவரது நடிப்பு சற்று அதிகப்படியாகத் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் கதை மற்றும் காட்சிகளின் ஆழத்தால் அது பாராட்டைப் பெறுகிறது. இயற்கை, அம்மா-மகன் உணர்வு, அதனால் ஏற்படும் உளவியல் பாதிப்பு ஆகியவை சுவாரஸ்யத்தைக் கொண்டு வருகின்றன.
 
நாயகியாக அனனி சுவாமிநாதன் சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், நிறைவாக நடித்திருக்கிறார். நண்பராக வரும் கருணாகரன் தனது எதார்த்தமான நடிப்பால் படத்திற்கு வலு சேர்க்கிறார். ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசையும் வித்தியாசமான ஒலிகளும் கவனத்தை ஈர்க்கின்றன. நாயகன் மட்டும் பயணிக்கும் இரண்டாம் பாதியில், பின்னணி இசை பார்வையாளர்களின் கவனத்தை இறுகப் பிடித்து வைக்கிறது.
 

மைனஸ்: திரைக்கதையில் கவனம் தேவை…. கருணாகரன் க்கு கூடுதல் காட்சிகள் கொடுத்திருக்கலாம்….

மொத்தத்தில் இந்த ‘போட்டோகிராப்’ ஒரு கனவு

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here