இது எனக்கு சவாலான படம்- நடிகர் & இயக்குனர் விஷால் பேச்சு
மனித உரிமைகள் மற்றும் மதச் சுதந்திர மாநாடு!
போட்டோகிராபர் விமர்சனம் RATING 2.9/5
அப்துல் பாசித் சையத் தயாரிப்பில் அஷ்ரப் எழுதி இயக்கி நாயகனாக நடிக்க, ஜனனி சாமிநாதன், கருணாகரன், உறியடி சிவா, ஆடுகளம் நரேன், தேவி மகேஷ் உடன் நடிப்பில் வந்திருக்கும் படம் தான் ‘போட்டோகிராபர்’.
கரு: தனது தாயின் கனவை தன் மூலமாக நிறைவேற்றுவதே ‘போட்டோகிராப்’
விமர்சனம்:
மைனஸ்: திரைக்கதையில் கவனம் தேவை…. கருணாகரன் க்கு கூடுதல் காட்சிகள் கொடுத்திருக்கலாம்….
மொத்தத்தில் இந்த ‘போட்டோகிராப்’ ஒரு கனவு
ஆண்டு விழாவில் சிறப்பான கராத்தே சாகச நிகழ்ச்சி!
சென்னை:
மெட்ராஸ் சேவா சதன் பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்பான கராத்தே சாகச நிகழ்ச்சிகள், அப்பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 7, 2026 இன்று நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகள், குழு உணர்வு மற்றும் சமூகக் கொண்டாட்டங்கள் நிறைந்த இந்நிகழ்வில் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஒன்றிணைந்தனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ராயப்பேட்டை மண்டலத்தின் காவல் உதவி ஆணையர் திரு. கே. ஜெகதீசன் (M.A., B.Ed) அவர்கள் கலந்துகொண்டு விழாவிற்குச் சிறப்பு சேர்த்தார்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, வலிமை, ஒழுக்கம் மற்றும் துல்லியத்தன்மையை வெளிப்படுத்தும் வகையிலான சிறப்பான கராத்தே சாகசங்கள் அமைந்திருந்தன. இதில் ஓடுகளை உடைத்தல், காரைத் தள்ளுதல் மற்றும் மாணவிகள் கைகளின் மீது கார்களை ஓட்டிச் செல்லுதல் போன்ற சாகசங்கள் இடம் பெற்றன.
குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக, மாஸ்டர் கேரிபாலா (GeriBala) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், செல்வி லட்சுமி பிரியா தனது இரு கட்டைவிரல்களை மட்டுமே பயன்படுத்தி காரைத் தள்ளும் தனித்துவமான சாகசத்தை நிகழ்த்தினார். இந்தச் செயல் சிறப்பு விருந்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் என அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.
பயிற்சியளித்து வழிநடத்திய மாஸ்டர் கேரிபாலா, தனது மார்பின் மீது 1,001 மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்ல அனுமதித்ததற்காக கராத்தே உலக சாதனை படைத்தவர் ஆவார். செப்டம்பர் 15, 2009 அன்று இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தச் சாதனை மூலம், ‘வார் வவுண்டட் ஃபவுண்டேஷன்’ (War Wounded Foundation) அமைப்பிற்கான நிதியும் திரட்டப்பட்டது.
உடல் தகுதி, தன்னம்பிக்கை மற்றும் தற்காப்பு ஆகியவற்றிற்கான ஒரு கருவியாக கராத்தே கலையை மாணவிகளுக்கு அறிமுகப்படுத்துவதும், தற்காப்புக் கலைப் பயிற்சியின் மூலம் பெறப்படும் தைரியம், கவனம் மற்றும் விடாமுயற்சி போன்ற விழுமியங்களால் அவர்களை ஊக்குவிப்பதும் இந்தச் செயல்விளக்க நிகழ்ச்சியின் நோக்கமாகும்
மெட்ராஸ் சேவா சதன் பள்ளி, சமூகத்தில் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட சிறுமிகளுக்குத் தரமான கல்வி மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதிலும், அவர்களின் கல்வி, உடல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
மாஸ்டர் ஜெரிபாலா பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்:
எங்கள் மாணவர்கள் இன்று கற்களை கையால் உடைத்து, கை விரலில் கார் ஏற்றி, இரு விரலில் காரை தள்ளி செய்த சாதனை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவனின் வெற்றி தான் ஒவ்வொரு மாஸ்டருக்கும் மகிழ்ச்சி அளிக்கும். பொதுவாக கராத்தே சிறந்த தற்காப்பு கலை ஆகையால் அனைவரும் கராத்தே கற்று கொள்ளுங்கள். சண்டை போடாமல் கற்று கொள்ள தற்காத்து கொள்ள வைப்பதே கராத்தே. எங்கள் மாணவர்கள் இன்னும் கராத்தேவில் சாதனை செய்ய பயிற்சி அளித்து வருகிறேன். என்று கூறினார்.
வேளாண் பட்ஜெட் என்ன? வாங்க பார்ப்போம்
தமிழ்நாடும் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்றைய தினம் துவங்கிய நிலையில் தவெக அரசுடைய முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இதனையடுத்து வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் இன்றைய தினம் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சர் வினோத் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், இது சம்பந்தமான விவாதங்கள் தற்போது ஆரம்பித்துள்ளது.
தவெக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்பாக முதன்முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் என்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. இதனையடுத்து நேற்றைய தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட்டில் எந்த புதிய அறிவிப்புகளும் இல்லையென எதிர்க்கட்சிகள் விமர்சிக்க ஆரம்பித்தன. ஏற்கனவே இருந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றி ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டப்பட்டுள்ளதாக விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.
இதற்கிடையில் இன்றைய தினம் வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பல விதமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ திட்டத்தின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் மாடித்தோட்டம், காய்கறி, பழச்செடி வளர்ப்பு உள்ளிட்டவை ஊக்குவிக்கப்படும் விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இரசாயன உரங்களை பயன்படுத்தாமல் வீட்டுத் தோட்டங்களில் நச்சுத்தன்மையற்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்யலாம்.
இதன் மூலமாக ஊட்டச்சத்து பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும். எனவே நகர்ப்புறங்களில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிராமப்புறங்களில் வீட்டை சுற்றியிருக்கும் நிலப் பகுதிகளில் செடி வளர்ப்புப் பைகளுடன் கூடிய தொகுப்புகள், நீரியல் தோட்டம் மற்றும் செங்குத்து தோட்டம் அமைக்கலாம். இதில் காய்கறிகள், மூலிகை செடிகள், பழங்கள் ஆகியவற்றை வளர்ப்பதன் மூலமாக நலமான சூழலையும் ஏற்படுத்த வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் திட்டம் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
இதற்காக நடப்பாட்டில் ரூ. 10 கோடி மாநில நிதியில் இருந்து ஒதுக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று விவசாயிகளுக்கு ‘வெற்றி விவசாயி’ உள்ளிட்ட முக்கியமான விருதுகள் வழங்கப்படும் எனவும் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட மற்றும் மாநில அளவில் விவசாயிகளுடைய உற்பத்தியை பெருக்கவும், அவர்களை கெளரவிக்கவும் விருதுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 ஏக்கர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி உள்ளிட்ட 9 பயிர்களை பயிரிட்டு அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு ‘வெற்றி விவசாயி விருது’ மாவட்ட அளவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் பரிசாக ரூ. 50,000, இரண்டாம் பரிசாக ரூ. 25,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தமாக 90 பரிசுகள் வழங்கப்படவுள்ள நிலையில், இதற்காக ரூ. 67.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தவெகவின் தேர்தல் வாக்குறுதியான 100% பயிர்க்கடன் தள்ளுபடி குறித்தான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சமீப காலமாகவே இதற்காக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில் இன்றைய வேளாண் பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி சம்பந்தமான அறிவிப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காவேரி மருத்துவமனை சேவையில் உயிர்காக்கும் ஏ.இ.டி கருவி!
பழனி நில மோசடி…. நால்வருக்கு போலீஸ் காவல்! தொடர் விசாரணை!!
திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவார பகுதியில் உள்ள தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாக ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸார், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்து வாரிசுதாரர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழநி அருகே புதூரைச் சேர்ந்த சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன், இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர்நீ திமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்று திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகியோரை கடந்த ஜூலை 29-ம் தேதி போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த சிபிசிஐடி போலீஸார், திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று நீதிபதி பாக்கியராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிசிஐடி போலீஸாரின் கோரிக்கையை ஏற்று, ஆக.5-ம் தேதி முதல் ஆக.7-ம் தேதி வரை (வெள்ளிக்கிழமை மதியம் வரை) மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, மதுரை மத்திய சிறையில் இருந்து திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நால்வரையும் சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்!
சென்னையில் 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
வெறுப்புப் பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்தப் புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடியை தண்டிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஜூலை 2 ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பொன்முடி மீதான வழக்கு, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்திர பாண்டியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி பொன்முடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, பொன்முடியை செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்தும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 2-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
‘அமுக்கரா’ குதிரை பலம் ரகசியம்!
இன்று நாம் தெரிந்து கொள்ளும் மூலிகை ‘அமுக்குரா’ எனும் ஒரு குத்து செடி இதற்கு ஆயுர்வேதத்தில் ‘அஸ்வகந்தா’ என்ற பெயரும் உண்டு அஸ்வா என்றால் குதிரை என்ற பொருளும் உண்டு இந்த மூலிகையை ஒரு ஆண்மகன் பக்குவப்படுத்தி பயன்படுத்தும் போது இல்லற வாழ்க்கையில் அவனது சக்தி குதிரைக்கு இணையாக இருக்கும் என்ற பொருளும் நாம் எடுத்துக் கொள்ளலாம் இது சாதாரணமாக மலைப்பகுதிகளில் வளரக்கூடியது.
இதன் வேர்ப்பகுதி மட்டுமே நமக்கு ஆண்மை விருத்திக்கான மருந்தாக பயன்படுகிறது இதன் வேர்களை சேகரித்து பாலில் புட்டு அவியல் செய்து இடித்து சூரணம் செய்து காலை மாலை இரண்டு கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர நரம்பு மண்டலங்கள் வலிமை அடையும் விந்து உற்பத்தி அதிகமாகும் மற்றும் நன்கு உறக்கம் வரும் மேலும் இதில் வரும் பழங்களை நாம் துவையல் செய்து சாப்பிடலாம்.
அமுக்குரா இதை பிரித்து பொருள் பார்த்தால் உறவில் ஆண்களுக்கு அமுக்கத்தை அதாவது போதிய அளவு நேரத்தை கூட்டக்கூடிய தன்மை கிடைக்கும் என்றும் பொருள் எடுத்துக் கொள்ளலாம். இதன் இலைகள் உடலில் வரும் கட்டிகளை பழுக்க வைக்க பயன்படுகிறது மேல் பூச்சியாக பயன்படுத்த கட்டிகள் பழுத்து உடையும்.
இப்படிப்பட்ட ஒரு சிறப்பான மூலிகை நரம்பு மண்டலங்களை பலப்படுத்த தூக்கத்தை வரவழைக்க உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் இதை அனைவரும் பயன்படுத்தி பலன் அடையுங்கள் நன்றி.
தொடர்பு கொள்ள:
திரு. கனகராஜ் (பாரம்பரிய வைத்தியர்)
சரவணா ஹெர்பல்ஸ், சேலம்
9942558530
அதிக மின்சார கட்டணம்! விளக்கம்!!
தமிழகத்தில் நடப்பு ஜூலை மாதத்துக்கான வீட்டு மின் கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, கடந்த மே மாதக்கட்டணத்தோடு ஒப்பிடும்போது, இருமடங்கு மின்கட்டணம் அதிகரித்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதனிடையே பில்லிங் செயல்முறையில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் மீட்டர் கணக்கீட்டுக் குறைபாடுகள் காரணமாக நுகர்வோருக்கு மின்கட்டணம் அதிகரித்ததாக மண்டல மின் தலைமை பொறியாளர் சமீபத்தில் விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டது குறித்தும், 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்பினை ஆய்வு மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மின்வாரியத் தலைவர் அருண் ராய் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கடந்த மே 2026 மாத மின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஜூலை 2026 மாதத்தில் மின் நுகர்வு மற்றும் கட்டண விகிதம் 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளுக்கு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மின் இணைப்புகளில் நேரடியாக கள ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மறுஆய்வுப் பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இதன்படி தலைமைப் பொறியாளர் 25 மின் இணைப்புகளையும், மேற்பார்வைப் பொறியாளர் 50 மின் இணைப்புகளையும், செயற்பொறியாளர் 75 மின் இணைப்புகளையும், துணை நிதி கட்டுப்பாட்டாளர் 50 மின் இணைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். இவர்கள் மட்டுமின்றி, உதவி செயற்பொறியாளர் 100, கணக்கு அதிகாரி 150, மூத்த மதிப்பீட்டு அதிகாரி 150, உதவி கணக்கு அதிகாரி 100, மதிப்பீட்டு அதிகாரி 150 மற்றும் உதவிப் பொறியாளர் 100 மின் இணைப்புகளையும் நேரடியாகச் சென்று சரிபார்க்க வேண்டும். இந்த நேரடி மறுஆய்வுப் பணிகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், இந்த ஆய்வுகளின் போது மின் கணக்கீட்டில் ஏதேனும் தவறுகள் அல்லது பிழைகள் கண்டறியப்பட்டால், உடனடியாகத் தேவையான திருத்தங்களை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மின்வாரியத் தலைவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மின்சாரம் பற்றிய புகார் எண்: 9498794987
















