சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

முன்னதாக, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்ட கவினும் லாஸ்லியாவும் நெருக்கமாக பழகி வந்தனர். விருந்தினராக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த லாஸ்லியாவின் அப்பா அவரைக் கண்டித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. மேலும் ஒருவரைப் பற்றி மற்றொருவர் பேசுவதை தவிர்த்து வந்தனர். அதன்பின், அவர்கள் பிரிந்துவிட்டதை லாஸ்லியா உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது, டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின் தனது நீண்டநாள் காதலி மோனிகாவை கரம்பிடித்துள்ளார். ரசிகர்களும் பிரபலங்களும் கவினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here