கதையின் நாயகி ஒரு ட்ராவல் ஏஜென்சியில் வேலை செய்கிறார். இந்த ஏஜென்சி சிங்கப்பூரில் இருக்கிறது. நாயகிக்கு அந்த ஏஜென்சி வருடத்திற்கு ஒரு இலவச விமான டிக்கெட் கொடுக்கிறார்கள். அப்படி நாயகிக்கு சென்னைக்கு வர டிக்கெட் கிடைக்கிறது, அப்படி சென்னை வந்த நாயகி தன் நண்பரை சந்திக்கிறார். அப்படி சந்திக்கும் இடத்தில் ஒரு மர்ம நபர் நாயகியை பற்றி விசாரிக்கிறார். சில நாட்கள் கழித்து சிங்கப்பூர் செல்லும் அந்த நபர், நாயகியை நேரில் சென்று சந்திக்கிறார்.

அதே சமயம் உடல் உறுப்பு திருட்டு குறித்து சில விஷயங்களும் நடக்கிறது. நாயகியின் அப்பா வேலை இழந்து கஷ்டப்படும் சமயத்தில். நாயகியும், அவரின் தம்பியும் ஆளுக்கொரு வீட்டில் சென்று திருட முயற்சிக்கின்றனர். அப்படி இவர்கள் போட்ட திட்டத்தின்படி, வீட்டில் திருடிவிட்டு தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை….

பெரிய மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக்  கொண்டிருக்க, அதை தான்தான் செய்தேன் என்று ஒரு கேரக்டரும் இன்னொரு பக்கம் ஜோவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். முடிவாக யார்தான் அதை செய்தார்கள் என்பது பெரிய சஸ்பென்ஸ்.

படத்தின் ஆரம்பக் காட்சியையும், முடிவுக் காட்சியையும் பார்க்காதவர்கள் இந்தக் கதையை எப்படியும் புரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை. அந்த இரண்டு காட்சிகளையும் பார்த்து விட்டால் ஒரு மாதிரி மனதைத் தேற்றிக் கொண்டு கதை இதுவாக இருக்கலாம் என்று யூகிக்க முடியும்.

சலீம் பிலால் ஜிதேஷின் ஒளிப்பதிவு பட்ஜெட்டுக்கு என்ன நியாயம் செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறது. ஆனால் ஆச்சரியமாக இசை ஒரு சிறந்த தமிழ் படத்துக்குரிய நேர்த்தியுடன் அமைக்கப்பட்டிருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும்.

படத்திற்கு திரைக்கதை, காமெடி பலம்….. கதையின் நீளம் பலவீனம்….. 

RATING: 3/5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here