ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ சார்பில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், நவீன் சந்திரா, விது, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், என பலர் நடிப்பில் ஏப்.3-ல் வெளியாகவுள்ள படம் தான் ‘நீளிரா’
விமர்சனம்:
இலங்கையில் வாழும் மக்களுக்கு ராணுவத்தால் ஏற்படும் துன்பங்கள் என்ன என்பதை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமே ‘நீளிரா’. இலங்கையில் வாழும் மக்கள் திருமணம் செய்ய இந்திய ராணுவத்திடம் மற்றும் இலங்கை ராணுவத்திடமும் ஒப்புதல் பெற்ற பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்று கதை தொடர்கிறது. திருமணம் நடைபெறும் வீட்டிற்கு ஒரு ராணுவ படை தவறான வரைபடத்துடன் வந்து சேர்கிறது. இலங்கை போராளிகளுக்கும் தவறாக வந்து சேர்ந்த ராணுவத்திற்கும் போராட்டம் தொடர்கிறது. இதில் யார் வெற்றி பெற்றார்கள்? என்பது தான் கதை…
நவீன் சந்திரா ராணுவ வீரராக, அதே சமயம் வீரனின் கடமை என்ன? பொறுப்பு என்ன? மக்களை எப்படி நடத்த வேண்டும் என அவர் கதாபாத்திரம் நம் மனதில் நிற்கிறது. கல்யாண பெண்ணாக சித்து குமரேசன் அவரது துடிப்பான இளம்பெண் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். விது, ‘கயல்’ வின்சென்ட் ஸ்வாதி கிருஷ்ணா, சிறுவர்கள் என அத்தனை பேருமே அந்த மண்ணின் மக்களாகவே நம் கண்ணுக்கு தெரிகிறார்கள். கபிலா வேணு அந்த போர் சூழலை அணுகும் விதத்தில் தத்ரூபமான நடிப்பால் அழுத்தமாக பதிகிறார். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு இரவு காட்சிகளில் எல்லாம் உண்மையில் பதைபதைக்க வைக்கிறார். இயக்குனர் சோமீதரன் தான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லி உள்ளார்.
மைனஸ்: கதையை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்…
இந்த ‘நீளிரா’- பதற்றம்

















