திருச்சியை அடுத்த திரு​வெறும்​பூர் அரு​கே​யுள்ள கூத்​தைப்​பார் பேரூ​ராட்​சிக்கு உட்​பட்ட பார​திபுரத்​தைச் சேர்ந்​தவர் அந்​தோணி​சாமி மகன் ரஞ்​சித்​கு​மார் (38). திமுக இளைஞரணி​யில் கூத்​தைப்​பார் பேரூர் செய​லா​ள​ராக​வும், பேரூ​ராட்சி 11-வது வார்டு கவுன்​சில​ராக​வும் இருந்​தார். மேலும், திரு​வெறும்​பூர் அரசு ஐடிஐ எதிரே உள்ள டாஸ்​மாக் கடை​யில் பார் நடத்தி வந்தார். இந்​நிலை​யில், திரு​வெறும்​பூரில் இருந்து நவல்​பட்டு செல்​லும் சாலை​யில் புதுத் தெரு பகு​தி​யில் ரஞ்​சித்​கு​மார் நேற்று முன்​தினம் இரவு வெட்​டிக் கொலை செய்​யப்​பட்டு கிடந்​தார்.

தகவலறிந்து நவல்​பட்டு போலீஸார் அங்கு சென்று ரஞ்​சித்​கு​மார் உடலை மீட்​டு, பரிசோதனைக்​காக திருச்சி அரசு மருத்து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். மாவட்ட எஸ்​.பி. செல்​வ​நாக ரத்​தினம் சம்பவ இடத்தை பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். மோப்ப நாய் காவிரி வரவழைக்​கப்​பட்டு போலீ​ஸார் சோதனை நடத்​தினர். மேலும், தடய​வியல் நிபுணர்​களும் ஆய்வு செய்​தனர். அப்​பகு​தி​யில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு​களை போலீ​ஸார் ஆய்வு செய்ததில், 3 இருசக்கர வாக​னங்​களில் வந்த 9 பேர், ரஞ்சித்​கு மாரை வெட்​டிக் கொன்​றதும், அதில் இருந்த பலரும் சிறார் போன்று இருந்​ததும் தெரிய ​வந்​தது.

இதுகுறித்து போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து கொலைக்​கான காரணம் குறித்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

மேலும், 8 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டு, கொலை​யாளி​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்ளது. கொல்லப்​பட்ட ரஞ்​சித்​கு​மாருக்கு மனை​வி, 2 மகள்​கள், ஒரு மகன் உள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here