ட்ரென்டிங் ஆர்ட்ஸ் புரடக்க்ஷன் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரிக்க, மைக்கேல் தங்கதுரை, கவிபிரியா மனோகரன், ஸ்ரீ ரஞ்சனி, கலைராணி, யாசர் நடிப்பில் அருண் கே.ஆர் இயக்கி இருக்கும் படம் தான் ‘ஆரகன்’.
நாயகி கவிப்ரியாவும், நாயகன் மைக்கேல் தங்கதுரையும் காதலிக்கிறார்கள். மலைப்பிரதேசம் ஒன்றில் உள்ள வீட்டில் நோய்வாய்ப்பட்டு தனிமையில் வசிக்கும் நடுத்தர பெண்மணி ஸ்ரீரஞ்சனியை பார்த்துக் கொள்ளும் பணிக்கு செல்ல கவிப்ரியா முடிவு செய்கிறார். ஒரு சாதாரண பணிக்கு நினைத்து பார்க்க முடியாத சம்பளம் என்பதால் சந்தேகம் அடையும் மைக்கேல் தங்கதுரை, கவிப்ரியாவை அங்கு செல்ல விடாமல் தடுத்தாலும், அதை கேட்காமல் அவர் அங்கு செல்கிறார்.
செல்போன் டவர் கிடைக்காத, ஆள்நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் அந்த வீடு மர்மமாக இருக்க, அந்த வீட்டில் இருக்கும் பொருட்களும் மர்மம் நிறைந்தவைகளாக இருப்பதோடு, முகம் பார்க்கும் கண்ணாடி வைத்துக் கொள்வது எங்கள் குடும்பத்திற்கு ஆகாது, என்பதால் நாங்கள் அதை பயன்படுத்த மாட்டோம், என்று ஸ்ரீரஞ்சனி சொல்கிறார்.
பிறகு நாயகியின் கைப்பேசி பழுதடைய அதன் மூலம் இருந்த காதலனுடனான தொடர்பும் இல்லாமல் போக, திடீரென்று நாயகியின் உருவத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அவருடைய தோற்றம் வயதானவராக தெரிகிறது. ஏன் தோற்றம் மாறியது? பின்னணி என்ன? என்பதே கதை.
படத்தொகுப்பாளர் சாய் தக்ஷா, வித்தியாசமான கதைக்களம் மற்றும் அதில் இருக்கும் திருப்பங்களை தொகுத்த விதம் படத்தை விறுவிறுப்பாகவும், எதிர்பார்ப்புடனும் பயணிக்க வைக்கிறது. கலை இயக்குநர் காகி ஜெயசீலனின் கைவண்ணமும் கவனம் ஈர்க்கிறது. பாடல்கள் ஓகே.
மூலிகை காட்சிகள் எல்லாம் ஓவரப்பா…. கதை ஈர்க்கவில்லை….பிரசவ காட்சிகள் முகம் சுளிக்க வைக்கிறது….
ஆரகன்- லாஜிக் அற்றவன்

















