தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனரான சம்யுக்தா விஜயன் அவர்களின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகியிருக்கும் படம் தான் நீல நிறச் சூரியன். திருநங்கைகளின் வாழ்வியலை மிகவும் உயிரோட்டமான ஒரு திரைக்கதைக் கொண்டு உருவாகியிருக்கும் ஒரு அழகிய படைப்பு தான் இந்த ‘நீல நிறச் சூரியன்’.
இப்படத்தில் சம்யுக்தா விஜயன், கிட்டி, கஜராஜ், கீதா கைலாசம், பிரசன்னா பாலசந்திரன், கே வி என் மணிமேகலை, மசந்த் நட்ராஜன், ஹரிதா, வின்னர் ராமசந்திரன், மோனா பெத்ரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.
அரவிந்த் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அரவிந்திற்கு தான் ஒரு ஆண் இல்லை பெண் என்ற உணர்வு சிறு வயதில் இருந்தே இருக்கிறது. ஆசிரியர் ஆன பிறகு ஒரு சில சிகிச்சை மூலம் பெண்ணாக மாற நினைக்கிறார்.
தனது இந்த முடிவை வீட்டில் கூற, பெற்றோர்கள் முதல் மனமுடைந்தாலும் பின் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், சொந்த பந்தத்தினர் விலகிச் செல்கின்றனர். தான் தனது உடையை மாற்றிக் கொள்ளும் முறையை மாற்ற இருப்பதாக பணிபுரியும் பள்ளியில் இருக்கும் தலைமை ஆசிரியரிடம் கூற அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால், பள்ளி மேலிடம் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறது. சேலை அணிந்து கொண்டு முழு பெண்ணாக மாறினார் அரவிந்த். பிறகு என்ன நடந்தது? என்பதே மீதி கதை.
ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்தில் அதிகமாக கவனம் பெறுகிறது. திருநங்கைகளின் வாழ்வியல் வலிகளை கதை தெளிவாக கூறுகிறது. தோழியாக வரும் ஹரிதாவின் நடிப்பு சிறப்பு.
சில திருநங்கைகள் ரெயில், பேருந்துகளில் ஏறி மிரட்டி பணம் கேட்பதெல்லாம் தவறு என்ற கருத்தையும் இப்படத்தில் முன் வைத்திருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நீல நிறச் சூரியன்- மன அழுகை

















