பாஸ்கர் சதாசிவம்  இயக்கத்தில், ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் சார்பில், பத்மராஜூ ஜெய் சங்கர் தயாரிப்பில், நாகேஷின் பேரன் கஜேஷ், ரித்விகா ஸ்ரேயா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் ‘உருட்டு உருட்டு’

விமர்சனம்:

நாயகன் கஜேஷ் நாகேஷ் (அறிமுகம்) மது போதையிலேயே திரிகிறார். இவரை நாயகியான  ரித்விகா ஸ்ரேயா வெறித்தனமாக காதலித்து வருகிறார். நாயகன் மாதுவை விட மது மீதே அதீத காதல் கொண்டவராக இருக்கிறார். தனது காதலனை திருத்துவதாக நினைத்து ஒரு விசயத்தை செய்து அனைவரையும் அதிர்ச்சியில் உரைய வைக்கிறார். அது என்ன? பிறகு என்ன நடந்தது என்பதே கதை…

நாயகனாக நடித்திருக்கும் கஜேஷ் நாகேஷ், கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி கச்சிதமாக நடித்திருக்கிறர்.  அறிமுக நடிகை ரித்விகா ஸ்ரேயா, வழக்கமான கமர்ஷியல் கதாநாயகிகள் போல், பாடல், நடனம் என்று கலர்புல்லாக வலம் வந்தாலும், திடீரென்று விஸ்வரூபம் எடுத்து அவர் செய்யும் செயல், கண்ணகியை மிஞ்சும் அளவுக்கு அதிர்ச்சிகரமாக இருக்கிறது.

மொட்டை ராஜேந்திரன், மூன்று பொண்டாட்டி முனுசாமியாக வாழ்ந்திருக்கிறார். அவரது மூன்று பொண்டாட்டிகளாக நடித்திருக்கும் அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி ஆகியோர், எந்தவித பாகுபாடு இன்றி மொட்டை ராஜேந்திரனையும், பார்வையாளர்களையும் குஷிப்படுத்தியிருக்கிறார்கள். தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர், ஆரம்பத்தில் அதிரடியான வில்லனாக எண்ட்ரி கொடுத்தாலும், அதன் பிறகு அமைதியாக வலம் வந்து மறைந்து விடுகிறார். 

எழுதி இயக்கியிருக்கும் பாஸ்கர் சதாசிவம், தற்போதைய சமூக சீரழிவை சிரிக்கும்படியான காமெடி ஜானரில் சொல்லியிருந்தாலும், எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் மூலம் குடிமகன்களுக்கு பேரதிர்ச்சியை  கொடுத்திருக்கிறார். டிப்பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளையும் அதனால் பெண்கள் சந்திக்கும் சங்கடங்களையும் கதை சொல்லுகிறது. 

மைனஸ்:  முதல் பாதி சற்று சோர்வாக இருக்கிறது… பாடலில் கூடுதல் கவனம் தேவை…

மொத்தத்தில் இந்த ‘உருட்டு உருட்டு’ கலகலப்பு  

 

         

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here