சென்னை:
உரத்த சிந்தனை எழுத்தாளர் சங்கத்தின் எழுத்துக்கு மரியாதை நிகழ்ச்சி சங்கத்தின் பொருளாளர் திரு.தொலைப்பேசி மீரானின் வரவேற்புடன் நேற்று இந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கில் தொடங்கியது. இதற்கு உரத்த சிந்தனை சங்கத்தின் துணைத்தலைவர் முனைவர் தபம்ஸ் திரு.மேகநாதன் தலைமையுரையாற்றினார். மேனாள் அரசவைக்கவிஞர் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் திரு.முத்துலிங்கம் முனைவர் திரு. அமுதா பாலகிருஷ்ணன் எழுதிய , “அண்ணாநகர் முதல் பிகார் வரை” என்ற நூலையும் . கவிஞர் குமரி அமுதன் எழுதிய “புதுக்கவிதையில் மானுடப் சிந்தனைகள்,” என்ற நூலையும் வெளியிட்டு இருவருக்கும் ” எழுத்துச்சுடர் என்ற விருதுகள் வழங்கினார்.
தனது சிறப்புரையில் தமிழின் பெருமையை பல்வேறு விதமாகக் கூறி அரங்கத்தில் இருப்போரின் கவனத்தை ஈர்த்தார். சிறந்த எழுத்தாளரும், பிரபலமான மருத்துவருமான திரு.ஜெ.பாஸ்கர் அவர்கள் திரு .குமரி அமுதன் எழுதியுள்ள “புதுக்கவிதையில் மானுடச் சிந்தனைகள்” என்ற நூலைப் பற்றி மதிப்புரை வழங்கினார். மேக்வெல் கன்டைனர் கேர் நிறுவனர், பாவையர் மலர் திருமதி . வான்மதி அவர்கள் “அண்ணாநகர் முதல் பிதார் வரை” நூலின் முதல் பிரதி பெற்று மதிப்புரை வழங்கினார்.
நம் உரத்தசிந்தனை மாத இதழில் கடந்த ஆண்டு பரிசு பெற்ற 24 வெண்பாக் களிலிருந்து தேர்வுபெற்ற இரண்டு வெண்பாக்கள் எழுதிய கவிஞர் திரு.பூம்புகார் நிலவன், கவிஞர் திரு குமரி அமுதன் ஆகிய இருவருக்கும் முனைவர்.திரு.அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் ஆகிய இருவருக்கும் தலா ரூ.3000/- பரிசு வழங்கினார் உரத்த சிந்தனை சார்பில் மூன்று மாணவர்களுக்கு ரூ.54000/- கல்வி உதவித்தொகைகளை , கல்வி வள்ளல் திரு.தி.நெ. முத்துக்குமாரசாமி, கவிஞர் தொலைபேசி மீரான், மருத்துவர் திருமதி வி. அலமேலு ஆகியோர் வழங்கினர்.
திருமதி, சிவசங்கரியின் அறம் செய விரும்பு திட்டத்தின் கீழ் தஞ்சையிலுள்ள கிராமப்புற கலைஞர் ஒருவரின் குடும்பத்திற்கு ரூ 25000/-க்கான காசோலையை உரத்த சிந்தனை சார்பில் மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்டின் நிறுவனர் நெல்லை பாலு கற்பக விருட்சம் அறக்கட்டளை சத்தியநாராயணனிடம் வழங்கினார். முனைவர்.திரு.பால சாண்டில்யன் கவித்துவத்துடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உரத்த சிந்தனை துணைப் பொருளாளர் திரு.மேலை பழ.நாகப்பன் நன்றி கூறினார். அறுசுவை உணவுடன் (அப்புவின் கைவண்ணம்) நிகழ்ச்சி நிறைவு பெற்றது.