தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் சில மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டதால், உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறாமல் உள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா காரணமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேரம் மாற்றியமைப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதற்கு முன்பு காலை 7 முதல் 5.30 மணி வரை இருந்த நேரம், கொரோனா தொற்று காரணமாக காலை 7 மணி முதல் 7 மணி வரை மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.