சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவரும் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் அவர்களை முத்து ரமேஷ் நாடார் என்பவர் தனது முகநூலில் தவறான தகவல்களை பதிவிட்டதாக, இதனை கண்டித்து சமத்துவ மக்கள் கழகம் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் நாடார் பேரவை நிர்வாகிகள் வண்டலூரை அடுத்த கண்டிகையில் உள்ள முத்து ரமேஷ் இல்லம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி அவரின் புகைப்படத்தை செருப்பால் அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினர்.
முத்து ரமேஷ் எங்கள் தலைவரிடம் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என நிர்வாகிகள் முழக்கம்யிட்டனர். இந்நிலையில் முத்து ரமேஷ் மீது சென்னை தண்டையார்பேட்டை காவல் நிலையத்திலும் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

















