மெட்ரோ ரயில்​கள், ரயில் நிலைய வளாகங்​களில் சக பயணி​களுக்கு இடையூறு ஏற்​படுத்​தும் வகை​யில் செல்​போனில் சத்​த​மாகப் பேசுவது, காதில் ஹெட்ஃ​போன் பொருத்​தாமல் செல்​போனில் பாட்டு கேட்​பது போன்ற பயண ஒழுங்​கு​முறை விதி​மீறல்​களுக்​கான அபராதம் ரூ.500-ல் இருந்து அதி​கபட்​ச​மாக ரூ.2,500 வரை உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் வெளி​யிட்ட அறிக்​கை: 

மெட்ரோ ரயில் பயண ஒழுங்​கு​முறை​களைப் பின்​பற்​றி, சக பயணி​களின் வசதிக்​கும், அமை​திக்​கும் மதிப்​பளிக்​கு​மாறு அனைத்து பயணி​களை​யும் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் கேட்​டுக் கொள்​கிறது.

மெட்ரோ ரயில் (இயக்​கம், பராமரிப்​பு) சட்​டம் 2002 பிரிவு 59-ன்​கீழ், சக பயணி​களுக்​குத் தொந்​தரவு விளை​விப்​ப​தோ, அவர்​களது வசதிக்கு இடையூறு ஏற்​படுத்​தும் வகை​யில் செயல்​படு​வதோ தண்​டனைக்​குரிய குற்​றம் ஆகும்.

குறிப்​பாக, மெட்ரோ ரயில்​கள் மற்​றும் வளாகங்​களில் செல்​போன் ஒலிபெருக்​கியைப் பயன்​படுத்​து​வது, காதில் ஹெட்போன் (Headphone) பொருத்​திக் கொள்​ளாமல் இசை, வீடியோக்​கள் பார்ப்​பது, செல்​போனில் உரத்த குரலில் பேசுவது ஆகிய செயல்​கள் மூலம் அதிக இரைச்​சலை ஏற்​படுத்​தும் வகை​யில் செல்​போன்​களைப் பயன்​படுத்​து​வதும், மற்​றவர்​களுக்கு இடையூறு விளை​விப்​பதும் தண்​டனைக்​குரிய குற்​ற​மாகக் கருதப்​படும்.

மத்​திய வீட்​டு​வச​தி, நகர்ப்​புற விவ​காரங்​கள் அமைச்​சகம் கடந்த ஜூன் 19-ம் தேதி வெளி​யிட்ட அரசிதழ் அறி​விப்​பின்​படி, ‘ஜன் விஸ்​வாஸ் சட்​டம் 2026’-ன் கீழ் ஒரு புதிய திருத்​தம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. அதன்​படி, மெட்ரோ ரயில் மற்​றும் அதன் வளாகங்​களில் மற்ற பயணி​களுக்கு இடையூறு விளைவிக்​கும் செயல்​களில் ஈடு​படு​வோருக்​கான அபராத தொகை ரூ.500-ல் இருந்து தற்​போது அதி​கபட்​ச​மாக ரூ.2,500 வரை உயர்த்​தப்​பட்​டுள்​ளது. மேலும், விதி​களை மீறும் பயணி​கள் அங்​கீகரிக்​கப்​பட்ட அதி​காரி​களால் மெட்ரோ வளாகத்​தில் இருந்து உடனடி​யாக வெளி​யேற்​றப்​பட​வும் வாய்ப்பு உள்​ளது.

எனவே, சக பயணி​களின் பயணச் சூழலைக் கருத்​தில் கொண்​டு, அனை​வரும் மெட்ரோ ரயில் மற்​றும் அதன் வளாகங்​களில் உரத்த குரலில் பேசுவது, ஒலிபெருக்கி பயன்​படுத்​து​வது (ஸ்​பீக்​கர் மோடு) ஆகிய​வற்றை தவிர்த்​து, காதில் பொருத்​திக் கொள்​ளும் ஹெட்போன்களை பயன்​படுத்​து​மாறு கேட்​டுக் கொள்​ளப்​படு​கிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here